சர்கார் படத்துக்கு எதிர்ப்பு - அமைச்சர்களுக்கு அரிவாளை காட்டி விஜய் ரசிகர்கள் மிரட்டல் - வைரலாகும் வீடியோ

vijay

சர்கார் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர்களுக்கு அரிவாளை காட்டி விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், அவருடைய அதிமுக அரசையும் கடுமையாக விமர்சிக்கிறது விஜய்யின் சர்கார். இதை கண்டித்து நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் முருகதாசுக்கு எதிராக அதிமுக அமைச்சர்களும் தொண்டர்களும் கம்பு சுழற்றினர். விஜய்யின் கட் அவுட்டுகள் கிழித்தெறியப்பட்டன. தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் முன்பு வன்முறையில் ஈடுபட்டனர் அதிமுகவினர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதனால் ஏகத்துக்கும் பதட்டமானது தமிழ்த்திரை உலகம். சர்காரிலுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்திப் போராட்டங்களை நடத்தினர். சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன. இது, விஜய் ரசிகர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

இந்த நிலையில், விஜய்க்கு எதிராகவும் சர்க்கார் திரைப்படத்துக்கு எதிராகவும் கிளர்ச்சி செய்த அமைச்சர்களையும் அதிமுகவினரையும், அரிவாள்களை காட்டி கொலை மிரட்டல் விடுக்கும் விஜய் ரசிகர்களின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தற்போது, இந்த வீடியோ உளவுத்துறையினரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கும் நிலையில், 'யார் அந்த விஜய் ரசிகர்கள்?' என விசாரிக்கத் துவங்கியுள்ளது சென்னை மாநகர காவல்துறை.

minister sarkar vijay fans
இதையும் படியுங்கள்
Subscribe