Advertisment

'சர்கார்' கதையும் 'செங்கோல்' கதையும் ஒன்றுதான் - இயக்குநர் கே.பாக்யராஜ் கடிதம்

sarkar

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

'சர்கார்' கதையும் 'செங்கோல்' கதையும் ஒன்றுதான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ், பொதுச்செயலாளர் மனோஜ்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெளிவாக விவாதித்து ஒரு சிலரின் கருத்து வேறுபட்டிருந்தாலும் மெஜாரிட்டி மெம்பர்களின் ஒப்புதலின் பேரில் தெளிவாக 'செங்கோல்' என்ற கதையும், 'சர்கார்' படக்கதையும் ஒன்றே என முடிவு செய்தோம்.

இக்கடிதத்தின் மூலம் சங்கத்தின் உறுப்பினரான வருண் (எ) கே.பி.இராஜேந்திரன் ஆகிய உங்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், 21.11.2007ஆம் ஆண்டு பதிவு செய்த 'செங்கோல்' என்ற கதையும், 'சர்கார்' படக்கதையும் ஒன்றே என சங்கம் தனது முடிவை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறது. உங்கள் பக்க நியாளத்திற்காக நீங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வதை நாங்கள் தடை செய்ய மாட்டோம். முழுமையாக உங்களுக்கு உதவ முடியாமைக்கு வருந்துகிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.

kb

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் என்ற திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில், சர்கார் படத்தின் கதை, திரைக்கதை தன்னுடையது என்றும் சர்கார் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வருண் என்ற ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், செங்கோல் என்ற தலைப்பில் நான் கதை எழுதினேன். இந்த கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். இந்த நிலையில், என்னுடைய கதையை திருடி, சர்கார் என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்கி உள்ளார். இது குறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்தேன்.

அந்த சங்கத்தின் தலைவர் கே.பாக்கியராஜ், இருதரப்பையும் அழைத்து விசாரித்தார். இறுதியில், இருவரது கதையும், ஒரே கதை தான் என்று உத்தரவிட்டுள்ளார். எனவே, சர்கார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். அந்த படத்தின் கதை என்னுடையது என்று அறிவிக்க வேண்டும்’. இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தரம் முன்பு 25.10.2018 வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி படத்துக்கு தடை விதிக்க மறுத்து விட்டார். மேலும், வழக்கிற்கு பதிலளிக்க சர்கார் படத்தின் இயக்குனர் முருகதாஸ், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பாக்கியராஜ் உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

court film storey vijay vijay sarkar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe