Saravanampatti incident!

கோவையில்15 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு புதரில் மூட்டைக் கட்டி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் குடும்ப நண்பரே கைது செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

Advertisment

கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள சிவானந்தபுரம் யமுனா நகரில் தூய்மைப்பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, புதர் ஒன்றில் மூட்டை ஒன்று கிடந்துள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வீச அந்த மூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

Advertisment

சம்பவ இடத்திற்கு வந்த சரவணம்பட்டி காவல்துறையினர், விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டனர். உயிரிழந்தது 15 வயது சிறுமி என்பதையும், அச்சிறுமியைக் கடந்த 11ஆம் தேதி காணவில்லை எனக் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர் என்பதும் உறுதி செய்யப்பட்டது. உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதுவும் சிறுமியின் வீட்டின் அருகிலேயே புதர் ஒன்றில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியநிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் நகைக்காகச் சிறுமியைக் குடும்ப நண்பரே கொலை செய்தது தெரியவந்துள்ளது.

3 சவரன் நகைக்காகச் சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்ற முத்துக்குமார் என்ற நபர், சிறுமியைக் கொலை செய்தது தெரியவர அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

Advertisment