Skip to main content

சரவணபவன் ராஜகோபால் காலமானார்!

Published on 18/07/2019 | Edited on 18/07/2019

சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது காலமானார்.

ஜீவஜோதி கணவர் பிரான்சிஸ் சாந்தகுமாரை கொலை செய்த வழக்கில், ராஜகோபாலுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 9 ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார் ராஜகோபால்.

saravanabhavan Rajagopal passes away


அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் ராஜகோபாலின் உடல்நிலை மோசமடைததால் அவர் அரசு ஸ்டான்லி மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. ஆனால் அங்கே மருத்துவ வசதிகள் சரியாக இல்லை எனவே தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற அனுமதிக்கோரி அவரது மகன் சரவணன் மனுதாக்கல் செய்திருந்தார்.

 

saravanabhavan Rajagopal passes away


தற்போதைய நிலையில் அவரை இடமாற்றுவது சிக்கலானது என ஸ்டான்லி மருத்துவமனை அறிக்கை விடுத்த நிலையில் அதற்கு தான் முழு பொறுப்பேற்பதாக ராஜகோபால் மகன் தரப்பு கூற ராஜகோபால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற நீதிமன்றம் அனுமதியளித்தது. அதனையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்றுவந்தது. இந்நிலையில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தன் மகளை விட அதிக மதிப்பெண் எடுத்த காரணத்திற்காக சிறுவனை கொன்ற தாய்!

Published on 04/09/2022 | Edited on 04/09/2022

 

ரதக

 

காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து சிறுவனை கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் ராணி. இவருடைய மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  அவர்கள் வீட்டிற்கு அருகே உள்ள சிறுவனும் அதே பள்ளியில் அந்த மாணவி உடன் ஒரே வகுப்பில் படித்து வருகிறார். மாணவியை விட மாணவன் மிகவும் திறம்பட படித்து வந்துள்ளார். தேர்வில் அந்த மாணவனே அதிக மதிப்பெண் எடுத்துவந்துள்ளார். இது மாணவியின் தாயாரான ராணிக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. இதனால் தன்னுடைய மகள்  சிறுவனை விட குறைவான மதிப்பெண் எடுப்பதை விரும்பாத அவர், சிறுவனை அழைத்து விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். நண்பரின் தாயார் தானே என்று அவரும் விஷம் கலக்கப்பட்டிருப்பதை அறியாமல் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த சிறுவன் மயக்கமடையவே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் தற்போது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாணவியின் தாயாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

Next Story

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பூசாரி... சோகத்தில் கிராமத்தினர்!

Published on 05/11/2021 | Edited on 05/11/2021

 

3

 

தமிழகம் முழுவதும் நவம்பர் மாதத்தின் தொடக்கத்திலிருந்து கனமழை பொழிந்து வருகிறது. பல மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடும் அளவுக்கு மழையின் அளவு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. 

 

திருச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள பாலங்களில் காட்டாற்று நீர் கரைபுரண்டு ஓடுகிறது. துறையூர் அருகே சேனப்ப நல்லூர் கிராமத்தில் உள்ள கோவில் பூசாரி அரிராஜ் (40). கோவில் நடையைச் சாற்றி விட்டு வீடு திரும்பிய போது ஆற்றைக் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகக் காட்டாற்று வெள்ளம் அவரை இழுத்துச் சென்றுள்ளது. துறையூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறை மீட்புக்குழுவினர் அரிராஜை தேடிய பொழுது இறந்த நிலையில் இருந்த அவரது உடலைச் சடலமாக மீட்டனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.