சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் ஜீவஜோதி என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்ய அவரது கணவர் பிரான்சிஸ் சாந்தகுமாரை கொலை செய்த வழக்கில், ராஜகோபாலுக்கு வழங்கப்பட்டஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை உடனடியாக சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அவர்தற்போது சென்னை 4 வது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
மருத்துவமனையிலிருந்து அழைத்து வரப்பட்ட ராஜகோபால் மாடிப்படிகளில் ஏறமுடியாததால் வேனிலிருந்தே சரணடைந்தார். ராஜகோபாலுடன் தண்டனைபெற்ற ஜனார்த்தன் என்பவரும் சென்னை 4 வது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ராஜகோபாலைவீல் சேரில் அழைத்துவர காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் ராஜகோபாலனின் உதவியாளரான ஜனார்த்தன் மற்றும் ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.