மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்.
ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், தனது உடல்நிலையை காரணம் காட்டி சரண் அடைவதற்கு அவகாசம் கேட்டிருந்தார் ராஜகோபால். ஆனால், அவருக்கு அவகாசம் வழங்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், உடனடியாக சரணடையும்படி உத்தரவிட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajagopal_1.jpg)
இதைத்தொடர்ந்து ராஜகோபால் ஆம்புலன்ஸ் மூலம் வந்து சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்ட ராஜகோபாலை நீதிபதி புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். உடல்நிலை காரணமாக சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜகோபாலுக்கு அரசு மருத்துவமனை சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாததால் மீண்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க கோரி ராஜகோபால் மகன் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் சேர்க்க அனுமதி அளித்து உத்தரவிட்டனர். ஆனாலும், ரத்த அழுத்தம் குறைவாக இருப்பதால் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் மாற்றுவதில் சிக்கல் உள்ளது. ஆகவே, ரத்த அழுத்தம் சீராகும் வரை சிகிச்சை தரப்படும் என ஸ்டாலின் மருத்துவமனை தெரிவிக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)