Advertisment

சரவணபவன் ராஜகோபால் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், வெண்ட்டிலெட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வருகிறார். உச்சநீதிமன்ற உத்தரவு படி கடந்த 9 ஆம் தேதி எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜரானார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால், தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் நீதிமன்றம் வந்தார். அதனைத் தொடர்ந்து நீதிபதி புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். சிறைக்கு செல்லும் போதே ராஜகோபால் உடல்நிலை மோசமானதால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ராஜகோபாலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு 11.00 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதனால் அவரின் உடல்நிலை மோசமானதாகவும், ஸ்டான்லி மருத்துவர்கள் தெரிவித்தன.

Advertisment

saravanabhavan hotel md raja gopal health very critical stanli hospital

அதன் பிறகு வெண்ட்டிலேட்டர் இயந்திரம் மூலம் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது என தெரிவித்தன. மேலும் ராஜகோபாலில் உடல் நிலை மருத்துவ இயந்திரங்கள் உதவியுடன் இயங்கி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தன. இதன் காரணமாக சரவணபவன் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் நேற்று இரவு முதலே மருத்துவமனைக்கு வரத்தொடங்கியுள்ளன. அதிகாலை 03.00 மணியளவில் ராஜகோபால் உடல் நிலை சற்று முன்னேற்றம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தன. இருப்பினும் வெண்டிட்லேட்டரில் இருந்து வெளியே வந்தால் மட்டுமே ராஜகோபாலன் உடல்நிலை குறித்து முழுமையான நிலை தெரிய வரும் என ஸ்டான்லி மருத்துவர்கள் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

stanli hospital very critical stage raja gopal health Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe