
சென்னையில் சரவணா ஸ்டோரில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தி.நகர், பாடியில் பிரமாண்டமாய் என்ற பெயரில் இயங்கி சரவணா ஸ்டோரில் 3 மணி நேரத்திற்கு மேலாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை பெரம்பூரில் இயங்கி வரும் சரவணா ஸ்டோரின் உறவினரான ரேவதி குழும நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

சரவணா ஸ்டோர், ரேவதி குழுமங்கள் மற்றும் உரிமையாளர்களின் வீடுகள் என சென்னை, கோயம்புத்தூரில் 72 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக செலுத்தப்பட்டு வரும் வருமான வரி பற்றி இந்த சோதனையின்போது விசாரணை நடைப்பெற்று வருகிறது.

வருமான வரித்துறையின் சோதனையினால் சரவணா ஸ்டோரில் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Follow Us