Skip to main content

உச்சநீதிமன்றத்தில் தமிழில் வெளியான முதல் தீர்ப்பு... படிக்காமலேயே உயிரை விட்ட அண்ணாச்சி!

Published on 18/07/2019 | Edited on 18/07/2019

சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இனி பிராந்திய மொழிகளில் வெளியாகும் என்று உச்சிநீதிமன்ற பதிவாளர் அறிவித்திருந்தார். அதில் தீர்ப்பு வெளியாகும் மாநில மொழிகளாக தெலுங்கு, வங்காளம் உள்ளிட்ட சில மொழிகள் இடம் பெற்றிருந்தாலும் தமிழ் மட்டும் அந்த மொழி் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ் ஆர்வலர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக அரசியல் கட்சிகளும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை தமிழிலும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தமிழ் உள்ளிட்ட 9 பிராந்திய மொழிகளில் 1oo-க்கும் மேற்பட்ட வழக்குகளின் தீர்ப்புக்கள் உச்சநீதிமன்ற இணையதளத்தில் தற்போது வெளியாகி உள்ளது. 

 

rajagopal verdict issue



உச்சநீதிமன்றத்தில் தமிழில் வெளியான முதல் தீர்ப்பு என்பது சரவண பவன் அண்ணாச்சி ராஜகோபாலுடையது தான். கடந்த இருபது ஆண்டுகளாக அந்த வழக்கு விசாரணை தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்றால், அந்த வழக்கின் தீர்ப்பும் தற்போது புதுவிதமான வியப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன ஒன்று, தமிழில் வெளியான அந்த முதல் தீர்ப்பை படிக்காமலேயே அண்ணாச்சி ராஜகோபால் மரணமடைந்தார் என்பதுதான் மற்றொரு  ஆச்சரியம்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் இன்று பதவியேற்பு!

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர். ராஜகோபால் இன்று (21/11/2019) காலை பதவியேற்றுக் கொள்கிறார். கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில், ஆர். ராஜகோபாலுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இன்று பதவியேற்கும் ஆர். ராஜகோபால் தமிழக தலைமை ஆணையராக மூன்று ஆண்டுகள் பதவி வகிப்பார்.

tamilnadu right to information commissioner r rajagopal swearing in ceremony


தமிழக தலைமை ஆணையராக இருந்த ஷீலாபிரியா வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்றதை அடுத்து, ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால், தலைமை தகவல் ஆணையராக அண்மையில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Next Story

ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தமிழக தலைமை தகவல் ஆணையராக நியமனம்!

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.


தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தற்போது தமிழக தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கக்கூடிய ராஜகோபால் தற்போது இந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இதற்கு முன்னதாக தமிழக தலைமை ஆணையராக இருந்த ஷீலாபிரியா வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்றதை அடுத்து அந்த பதவி காலியானது. அதன் தொடர்ச்சியாக தலைமை தகவல் ஆணையராக யாரை தேர்வு செய்யலாம் என்று முதலமைச்சர் தலைமையில் தேர்வு குழு ஒன்று தேடுதல் குழுவை அமைத்தது.

 

R. Rajagopal

 

ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி சிங்காரவேலு தலைமையில் அந்த தேடுதல் குழுவானது அமைக்கப்பட்டது. அதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை என கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.வெங்கடேசன் ஆகிய குழுவானது அமைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. தலைமை தகவல் ஆணையர் பதவிக்கான தகுதிகள் இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டிருந்தது. அதன்படி பொது மக்களின் வாழ்க்கை முறையை நன்கு அறிந்தவர்கள், சட்டத்தில் முன் அனுபவம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நிர்வாகம், மேற்பார்வையில் ஆளுமை ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்கள் விண்ணப்பிக்கலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் விண்ணப்பிக்க கூடிய நபர்கள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் கூடாது, அரசியல் கட்சியைச் சாராதவராகவும் ஆதாயம் தரும் பதவிகளில் இல்லாதவராகவும் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில் பல்வேறு தரப்பினர் தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்த தேடுதல் குழுவானது வந்திருந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து முதலமைச்சர் தலைமையிலான தேர்வு குழுவிடம் சமர்ப்பித்தது. இன்றைய தினம் காலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையிலான தேர்வு குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

தேடுதல் குழு கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் இறுதி செய்யப்படுவதற்கான கூட்டம் அரை மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் குழுவில் ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் மூன்று பெயர்களுடன் கூடிய அந்த இறுதிப் பட்டியலை ஆளுநரிடம் நேரில் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் ஐஏஎஸ் தற்போது மாநில தகவல் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் தற்பொழுது ஆளுநரின் புதிய செயலாளராக ஆனந்தராம் விஷ்ணு பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார்