Advertisment

'காந்தி போல ஹிட்லர் படத்தையும் மக்கள் ரசிக்க தான் செய்வார்கள் '-'800' குறித்து சரத்குமார் கருத்து!  

 Sarathkumar statement about 800

Advertisment

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என தமிழ் தேசிய அமைப்பினர் மற்றும் திரையுலகைச் சார்ந்த பிரபலங்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அண்மையில் அமைச்சர் ஜெயக்குமார் நடிகர் விஜய்சேதுபதி முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதைமறுபரிசீலனை செய்ய வேண்டும் என அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கலைஞர்களுக்கு அணை கட்டக்கூடாது எனசமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 800 திரைப்படத்தை பலரும் சர்ச்சைக்குரிய விஷயமாக கருதி எதிர்க்கின்றனர். காந்தி போல ஹிட்லர் படத்தையும் மக்கள் ரசிக்க தான் செய்வார்கள். தனி மனிதன் தன் வாழ்க்கையில் வளர்ச்சி அடைய சாதனையாளரின் சரித்திரத்தை தெரிந்து கொள்வதில் தவறு இல்லை. சாதனையாளர்கள் குறித்த கதை களத்தை வரவேற்க வேண்டும் என கூறியிருக்கிறார்.மேலும் எல்லைகளை கடந்து கதைகளை தேர்வு செய்து நடிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

Vijay Sethupathi sarathkumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe