இன்று (03.03.2021) தூத்துக்குடியில் உள்ள புதுக்கோட்டைஎன்ற இடத்தில்சமகவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சமகவின் தலைவராகசரத்குமார் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். மேலும் கூட்டத்தில் பேசியசமகதலைவர் சரத்குமார், “மக்கள் நீதி மய்யம் - சமக - ஐ.ஜெ.கேகூட்டணிஉறுதியாகியுள்ளது. மக்கள் விரும்பும் கூட்டணியாக எங்கள் கூட்டணிஇருக்கும். கொள்கைரீதியாகஒன்று சேர்கிறோம். எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன்” என்றார்.
சசிகலா சந்திப்புக்குப் பிறகு, சரத்குமார் அதிமுககூட்டணியில் இருந்து விலகியதும், ஐ.ஜே.கே உடன் சேர்ந்து புதியக் கூட்டணி அறிவித்ததும், அண்மையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்கமலைசரத்குமார் நேரில் சந்தித்ததும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.