Advertisment

தமிழிசையெல்லாம் ஒரு சவாலா? அவரெல்லாம் ஒரு லீடரா? சரத்குமார் பதில்

saratkumar prpondiyan

Advertisment

காவிரி விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்று கடந்த மாதம் 16ம் தேதி மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அளித்திருந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதற்கிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டெல்லியில் விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்துக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் நேற்று நேரில் சென்று ஆதரவு அளித்தார்.

saratkumar prpondiyan

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், விவசாயிகளுக்காக அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் நடத்துகிறார்கள். இது மேலும் அழுத்தம் தருவதாக இருக்க வேண்டும். பதவியை ராஜினாமா செய்வது நல்லது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் கால தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதில் மத்திய அரசு மீதுதான் தவறு இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்த பிறகும் இழுத்தடிப்பது சரியல்ல. பல்வேறு மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றுவிட்டோம் என்பதல்ல வெற்றி, மக்களிடத்தில் வெற்றி பெற வேண்டும். விவசாயிகள் பிரச்சினையை தீர்த்து மக்களிடம் வெற்றி பெறுங்கள். இரு மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாக நடக்கும் இந்த பிரச்சினை பா.ஜனதா ஆட்சியில் தீர்ந்தது என்று இருக்கட்டுமே.

Advertisment

saratkumar prpondiyan 601.jpg

அதிமுக எம்எபிக்கள் ராஜினாமா செய்து பார்க்கட்டும் எனறு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சவால் விட்டுள்ளாரே?

தமிழிசையெல்லாம் ஒரு சவாலாங்க. அவரெல்லாம் ஒரு லீடரா. தமிழ்நாட்டில் இருந்துகொண்டு அப்பயொரு சவால் விடுவதென்பதெல்லாம் ஒரு தவறான விசயமாக பார்க்கிறோம். தமிழ்நாட்டில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். தொடர்ந்து இப்படி அவருடைய கட்சியினர் பேசுவதால் தமிழக மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். மத்தியில் ஆட்சியில் இருக்கக்கூடிய இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறீர்கள். தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள். ராஜினாமா பண்ணிப்பார்க்கட்டும் என்று சொல்லுவதற்கு இது போட்டிப்போடும் இடம் கிடையாது. போட்டி போடும் இடம் இது அல்ல. இது மக்கள் பிரச்சனை. விவசாயிகளின் பிரச்சனை. தமிழ் இன பிரச்சனை.

மத்திய அரசு நாடகமாடுகிறதா?

கர்நாடக மாநிலத்தில் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தல் பாஜகவுக்கு முக்கியமானது. ஆட்சி அமைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் காவிரி விவாரத்தில் முடிவு எடுத்தால் பாஜகவுக்கு எதிராக அமைந்துவிடுமோ, ஆட்சிக்கு வர முடியாதோ என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கும். இவ்வாறு கூறினார்.

cauvery issue Condemned Delhi saratkumar Tamilisai Soundararajan
இதையும் படியுங்கள்
Subscribe