Advertisment

ஸ்ரீதேவி அஸ்தியுடன் சென்னை வந்த போனிகபூர்

sridevi

நடிகை ஸ்ரீதேவி அஸ்தியுடன் அவரது கணவர் போனிகபூர் தனி விமானம் மூலம் சென்னை கொண்டு வந்தார். விமான நிலையத்தில் இருந்து சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே அக்கரையில் உள்ள பண்ணை வீட்டுக்கு கொண்டு சென்றார். போனிகபூருடன் மகள்கள் ஜான்வி, குஷி மற்றும் குடும்பத்தாரும் வந்துள்ளனர். இன்று காலை ராமேஸ்வரத்துக்கு புறப்பட்டு செல்கின்றனர். ராமேஸ்வரம் கடலில் இன்று அஸ்தியை கரைத்து சடங்குகளை செய்ய உள்ளனர்.

Advertisment

ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை துபாயில் மரணம் அடைந்தார். ஓட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் குளிக்க சென்றபோது குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி அவர் இறந்தார். துபாய் சட்ட வழக்கப்படி அவரது உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு, விசாரணை நடந்ததால் 3 நாள்கள் கழித்தே அவரது உடல் இந்தியா கொண்டு வரப்பட்டது. கடந்த புதன்கிழமை மும்பையில் அவரது உடல் தகனம் அரசு மரியாதையுடன் நடந்தது.

Advertisment
boni kapoor Chennai Rameswaram sridevi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe