
தர்மபுரியில் காளியம்மன் கோவில் திருவிழாவின்போது சப்பரம் கவிழ்ந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள காளியம்மன் கோவில் திருவிழாவின்போது சப்பரத் திருவிழா நிகழ்ந்தது. இந்த நிகழ்வின்போது சப்பரம் கவிழ்ந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சப்பரம் கவிழ்ந்து விழுந்தது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அண்மையில் தஞ்சையில் சப்பரத்தில் ஏற்பட்ட மின் விபத்து காரணமாக 11 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த மனோகரன், சரவணன் ஆகியோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கவும், மேலும் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Follow Us