Skip to main content

மரக்கன்றுடன் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த விவசாயி!

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

 

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கீழகாவட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தங்க சண்முகசுந்தரம். இவர் அகில இந்திய மக்கள் சேவை இயக்க  விவசாய பிரிவு மாநில தலைவராக உள்ளார். பச்சை மனிதன் என்று அழைக்கப்படும் இவர் எப்போதும் பச்சை நிற வேஷ்டி சட்டை மற்றும் பச்சை நிற தலைப்பாகை அணிந்து இருப்பார். 

 

 nominations



நம்மாழ்வார் கொள்கையை பின்பற்றி மாநிலம் முழுவதும் பசுமையை காக்கவும் நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டியும், இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என்று நூதன முறையில் பல்வேறு பிரச்சாரங்களை செய்து வருகிறார். அதேபோன்று நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.



 

இந்த நிலையில் அவரது சொந்த ஊரான கீழகாவட்டாங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான வேட்பு தாக்கல் செய்தார். அப்போது அவர், கிராமத்தை பசுமை கிராமமாக மாற்றுவேன் என்ற உறுதி மொழியுடன் மரக்கன்றுகளை ஏந்தி ஊர்வலமாக வந்து திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நுழைந்தார். அப்போது அங்கே இருந்த போலீசார் மரக்கன்றை உள்ளே எடுத்து செல்ல கூடாது என்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

அதனை தொடர்ந்து மரக்கன்றை வெளியே வைத்து விட்டு, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார். மரக்கன்றுடன் வந்து நூதன முறையில் மனுதாக்கல் செய்தது அப்பகுதியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது



சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
1085 nominations accepted in Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதாவது திருவள்ளூர் - 31, வட சென்னை - 67, தென் சென்னை - 64, மத்திய சென்னை - 58, ஸ்ரீபெரும்புதூர் - 53, காஞ்சிபுரம் - 31, அரக்கோணம் - 44, வேலூர் - 50, கிருஷ்ணகிரி - 41, தருமபுரி - 44, திருவண்ணாமலை - 49, ஆரணி - 48, விழுப்புரம் - 31, கள்ளக்குறிச்சி - 37, சேலம் - 52, நாமக்கல் - 58, ஈரோடு - 52, திருப்பூர் - 46, நீலகிரி - 33, கோயம்புத்தூர் - 59, பொள்ளாச்சி - 44, திண்டுக்கல் - 35, கரூர் - 73, திருச்சிராப்பள்ளி - 48, பெரம்பலூர் - 56, கடலூர் - 30, சிதம்பரம் - 27, மயிலாடுதுறை - 30, நாகப்பட்டினம் - 26, தஞ்சாவூர் - 36, சிவகங்கை - 39, மதுரை - 41, விருதுநகர் - 41, ராமநாதபுரம் - 56, தூத்துக்குடி - 53, தென்காசி - 37, திருநெல்வேலி - 53, கன்னியாகுமரி - 33 என மொத்தம் 1749 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்து திருவள்ளூர் -14, வட சென்னை - 49, தென் சென்னை - 53, மத்திய சென்னை - 32, ஸ்ரீபெரும்புதூர் - 32, காஞ்சிபுரம் - 13, அரக்கோணம் - 29, வேலூர் - 37, கிருஷ்ணகிரி - 34, தருமபுரி - 25, திருவண்ணாமலை - 37, ஆரணி - 32, விழுப்புரம் - 18, கள்ளக்குறிச்சி - 21, சேலம் - 27, நாமக்கல் - 48, ஈரோடு - 47, திருப்பூர் - 16, நீலகிரி - 16, கோயம்புத்தூர் - 41, பொள்ளாச்சி - 18, திண்டுக்கல் - 18, கரூர் - 56, திருச்சிராப்பள்ளி - 38, பெரம்பலூர் - 23, கடலூர் - 19, சிதம்பரம் - 18, மயிலாடுதுறை - 17, நாகப்பட்டினம் - 9, தஞ்சாவூர் - 13, சிவகங்கை - 21, மதுரை - 21, விருதுநகர் - 27, ராமநாதபுரம் - 27, தூத்துக்குடி - 31, தென்காசி - 26, திருநெல்வேலி - 26, கன்னியாகுமரி - 27 என மொத்தம் 1085 வேட்புமனுக்கள் எற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 56 வேட்பாளர்களும், குறைந்தப்பட்சமாக நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்களும் போட்டியில் உள்ளனர். வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். 

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.