உலகம் முழுவதும் உருமாறிய கரோனாவான ஒமிக்ரான் வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டிலும் ஒமிக்ரான் மற்றும் கரோனா தொற்று பரவிவருகிறது. தொற்று பரவல் அதிகரிக்காமல் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. அதன்படி வார இறுதி நாட்களான வெள்ளி முதல் ஞாயிறு வரை அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமையான நேற்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வழிபாட்டுதலங்களும் பொதுமக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படவில்லை. அதன்படி சென்னையில் பிரபலமான சாந்தோம் தேவாலயம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் ஆகியவை மூடப்பட்டன. இதனால், எப்போதும் மக்கள் கூட்டத்துடன் காணப்படம் இவ்விடங்கள் நேற்று வெறிச்சோடி இருந்தன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-01/th-4_6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-01/th-3_2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-01/th-2_6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-01/th-1_7.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-01/th_7.jpg)