Sankarapuram firecracker  incident... shop owner arrested!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். காயம்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சென்னை, சேலம், முண்டியம்பாக்கம் உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் சம்பந்தப்பட்ட பட்டாசுக் கடையின் உரிமையாளர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

விபத்து நடந்த இடத்தில் உள்ள கட்டிட இடிபாடுகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தி வந்தனர். அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் இடிபாடுகளில் இன்னும் யாராவது சிக்கி இறந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் இடிபாடுகளில் மேலும் யாராவது சிக்கி இறந்து இருக்கிறார்களா என்பதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் மீண்டும் தேடிவந்தனர். இந்தநிலையில் அந்த பட்டாசுக் கடையின் உரிமையாளர் செல்வகணபதியை போலீசார் கைது செய்துள்ளனர்.