Advertisment

சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது - திருமாவளவன் கருத்து!

கத

Advertisment

இருவேறு சமூகத்தைச்சேர்ந்த கவுசல்யாவும், சங்கரும் 2015-இல் திருமணம் செய்து கொண்டனர். 2016 மார்ச் 13-இல் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் சங்கர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

கௌசல்யா தந்தை உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. தண்டனையை எதிர்த்து 6 குற்றவாளிகளும், மூன்று பேர் விடுதலையை எதிர்த்து காவல்துறையும் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கில் இன்று காலை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிது. கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மற்ற ஐந்து பேருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகவும் நீதிமன்றம் குறைத்துள்ளது. இந்நிலையில் இந்தத் தீர்ப்பு குறித்து திருமாவளவன் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், நீதிமன்றத்தின் இந்தத்தீர்ப்பு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

judgment kowsalya shankar thiruma valavan udumalpet
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe