Skip to main content

கொள்ளை லாபத்தில் சானிடைசர் மற்றும் முகக் கவசம் விலைகள் ..? போலிகள் நடமாட்டம் ..?

Published on 25/03/2020 | Edited on 26/03/2020

கரோனா தாக்குதலுக்கு உலகநாடுகளே கலக்கத்தில் உள்ளநிலையில், அதிலிருந்து தன் நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், நோய் தாக்கத்தை முற்றிலும் ஒழிக்க பல முயற்சிகளையும் எடுத்து வரும் நிலையில், கரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்கள் தங்கள் கைகளை சானிடைசர்களை பயன்படுத்தி கைகளைச் சுத்தம் செய்யவும், காற்றில் பரவுவதைத் தடுக்கும் வகையில் முகக் கவசம் அணியவும் மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, முகக்கவசங்களையும், சானிடைசர்களையும் வாங்க மருந்தகங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர், இதைச் சந்தர்பமாக பயன்படுத்திக்கொண்டு சில வியாபாரிகள் அறுபது ரூபாய் முதல் என்பது ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த 200 மி.லி சானிடைசர், தற்போது முன்னூறு முதல் ஐநூறு ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும் பல மருந்தகங்களில் ஸ்டாக்கில்லை என்கிறார்கள். மேலும் முகக் கவசம் டூ பிலே மூன்று ரூபாயும், த்ரீ பிலே ஐந்து ரூபாய் வரை இருந்தது கரோனா தாக்கத்தால் தற்போது இருபத்தைந்து ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

 Sanitizer and face shield prices in robbery ..?


இது தொடர்பாக நம்மிடம் பேசிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தீனன், ஒரு முகக் கவசத்தின் விலை இருபத்தைந்து ரூபாய் முதல் நாற்பது ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது, அதேபோல சானிடைசரின் விலையோ 200 மி.லி ஐநூறு ரூபாய்க்கு மேல் விற்பனை செய்கிறார்கள். பில் கேட்டால் நோ ஸ்டாக்  இல்லை என்று தெரிவிக்கின்றனர், அதேபோல பல மருந்துகடைகளில் இந்த இரண்டு பொருட்களையுமே பதுக்கிதான் வைத்துள்ளனர். மேலும் இதற்கு பில் கிடையாது. எம்.ஆர்.பி  ரேட்டும் அழித்துவிட்டே விற்பனை செய்கின்றனர்.

இந்தநிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் மத்தியரசால் தனிமை படுத்தப்பட்ட மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அதன் விலை மேலும் அதிகரிக்கும், அரசு நிர்ணயம் செய்துள்ள சானிடைசரின் விலை 200 மி.லி அதிகபட்சம் 100 க்கும், முகக்கவசம் டூபிலே எட்டு ரூபாய்க்கும், த்ரி பிலே பத்து ரூபாய்க்கும் விற்பனை செய்ய கடுமையான கட்டுப்பாடு போட வேண்டும். இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..!

இவரைத் தொடர்ந்து சானிடைசர் மற்றும் முகக்கவசம் சப்ளையர் ஆன ஹரீஷ்ராகவனிடம் பேசினோம், முகக்கவசம் தற்போது, அதிகப்படியான தேவைகளால், அதிக விலைக்கு போலி முகக்கவசமும் ,விற்பனை செய்யப்படுகின்து, அதில் தமிழகம் முழுவதும் நடந்த சோதனையில் தரமற்ற போலி முகக்கவசம் மற்றும் எம்.ஆர்.பி விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்ததாக,  பிரபல மருந்தகம் ஆன அப்போலோ பார்மஸி உட்பட நாற்பது கடைகளுக்கு சீல் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 Sanitizer and face shield prices in robbery ..?


முகக்கவசம் தயாரிக்க முறையான பதினோரு சான்றுகளைப் பெற்று இருக்க வேண்டும், மருத்துவ உபகரணம் என்பதால் கைப்படாமல் தயாரிக்க வேண்டும், தற்போது தேவை அதிகமுள்ளதால் குடிசை தொழில் போல முகக்கவசம் தயாரிப்பது தவறு, முறையாக தான் தயாரிக்க வேண்டும். அதில் முக்கியமானது பி.எஸ்.இ (பாக்டீரியல் பில்டரேஷ்சன் எபிஸ்சியென்சி) என்ற சோதனை சான்று பெற்றி இருக்க வேண்டும், அதில் பரிசோதித்த பின் 95% தரமுள்ள முகக்கவசம் மட்டுமே விற்பனைக்கு அனுப்படும். இதில் இரண்டு வகை முகக்கவசம் தற்போது பயன்படுத்துகிறோம். அதில் டூப்ளே முகக்கவசம் ( ஸ்பன் பவுண்டு பாலி புரோபிலீன்) மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த மூலப்பொருள் பெரும்பான்மையாக சீனாவில் இருந்தே இறக்குமதி ஆவதால் தற்போது அந்த நாடு தடை செய்துள்ளது. 

த்ரி பிலே முகக்கவசத்தின் நடுவில் பாலி புரோபிலீன் கொண்டு தயாரிக்க வேண்டும், அதேபோல இதன் விலை கடந்த ஜனவரி 24ல் குஜராத்தில் நடந்த எக்ஸ் போவில் ரூ.2:50 பைசாவாக இருந்தது தற்போது 15 ரூபாய் வரை தயாரிப்பு செலவே வந்துவிட்டது. மார்கெட்டில் 35 ரூபாய் வரை விற்பனையானது. ஆனால் அரசு சமீபத்தில் அதிகபட்சம் பத்து ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் இதன் விலை அதிகரித்தே விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சம் ஒரு முகக்கவசத்தை இரண்டு மூன்று முறை மட்டுமே பயன்பபடுத்த வேண்டும். அதேபோல சானிடைசர் என்ற பெயரில் டெர்பன்டாயில் பயன்படுத்தி போலிகள் தயாரிக்கப்படுகிறது. அதையும் அரசு கட்டுப்படுத்த வேண்டும், இதைப் பயன்படுத்தி  சட்டவிரோத பண பரிவர்தனைகளும் நடைபெறுகின்றது வருத்தமான விஷயம் என்றார்.

 

 Sanitizer and face shield prices in robbery ..?

 

இவரைத் தொடர்ந்து சமூக ஆய்வாளர் ஆன தேவேந்திரன், எல்லாம் சரி அன்றாடங் காய்ச்சிகளை அரசு சற்று உற்று நோக்க வேண்டும், சுகாதாரத்துறை மட்டுமல் மற்ற துறையும் அரசுடன் கைகோர்த்து செயல்பட வேண்டும், சானிடைசர் விலை முந்நூறு முதல் ஐநூறு, அறுநூறு விக்கிறாங்க, ஒரு முகக்கவசம் பத்து முதல் முப்பது ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. அதில் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முகக்கவசம் பயன்படுத்த வேண்டிய நிலையில் பணத்திற்கு எங்கே போவார்கள்..? ஆகவே டில்லியில் குறிப்பிட்டுள்ளது போலவே, ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்ய அரசு உடனடியாக ஏற்பாடுகளைச் செய்தால் மாட்டுமே சாமானியனைக் காப்பாற்ற முடியும் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.