வேலூர் மாநகராட்சிக்குட்மட்ட பகுதியில் தூய்மை பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள் கையுறை, கால் உறை, முகக்கவசம் என போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றும் வேலூர் மாநகராட்சி அலுவலகத்திற்க்கு எதிரே செல்லும் நிக்கல்சன் கழிவு நீர் கால்வாயில் தேங்கியுள்ள குப்பை கழிவுகளை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சிலர் வெறும் கை, கால்களால் இறங்கி தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இது தொடர்பாக வேலூர் மாநகராட்சி ஆணையரை தொடர்பு கொண்ட போது தற்போது வரை தொடர்பு கிடைக்கவில்லை.மேலும் நேற்றும் (26.01.2025) இதேபோல வேறு ஒரு இடத்திலும் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூய்மை பணியில் ஈடுபட்டது குறித்து மாநகராட்சியிடம் கேட்டபோது, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.