கடலூர் மாவட்டம் பாதிரிக்குப்பம்ஊராட்சியில் தூய்மை பணியாளராகப்பணியாற்றி வந்தலலிதாஉடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். தூய்மை பணியின் போதுஏற்பட்ட கிருமித்தொற்றினால் தான்லலிதா உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்தாகக் கூறி தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி பாதிரிக்குப்பம்ஊராட்சி மன்ற அலுவலகத்தின்முன்பு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், பணிநிரந்தரம்செய்ய வேண்டும்.பணிக்காலத்திற்குப் பிறகு ஓய்வூதியம்வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும்போராட்டத்தில் வலியுறுத்தினர்.