Advertisment

தூய்மைப் பணியாளர்களுக்கு 'பிரியாணி' விருந்து வைத்து அசத்திய சமூக ஆர்வலர்!

sanitary workers briyani food social activist

அண்ணாமலைநகர் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் கரோனா தடுப்புப்பணிகளைக் கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு சால்வை அணிவித்து முகக் கவசம், கபசுர குடிநீர் வழங்கி அனைவரையும் அமர வைத்து பிரியாணி விருந்து வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அண்ணாமலைநகர் சிறப்பு பேரூராட்சி உள்ளது. இங்கு தூய்மைப் பணியாளர்கள் 35 பேர் உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்டவர்கள் பேரூராட்சி பணியாளர்களாக உள்ளனர். இவர்கள் கரோனா ஊரடங்கு நேரத்தில் பேரூராட்சி பகுதிகளில் தங்களின் உயிரைப் பணயம் வைத்து அனைத்து வீடுகளுக்கும் கிருமி நாசினி, பிளிச்சிங் பவுடர் உள்ளிட்டவைகளைத் தெளித்து அப்பகுதியில் வாழும் மக்களைப் பாதுகாத்து வருகின்றனர்.

Advertisment

sanitary workers briyani food social activist

இவர்களின் சேவையைக் கௌரவிக்கும் வகையில் உள்ளதால் சி.கொத்தங்குடி ஊராட்சி முத்தையாநகரில் வசிக்கும் சமூக ஆர்வலர் சத்தியமூர்த்தி சம்மந்தப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பேரூராட்சியில் பணியாற்றும் அனைவருக்கும் முகக் கவசம், கபசுர குடிநீர் பவுடர் மற்றும் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்தார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் அண்ணாமலைநகர் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் முகக் கவசம், கபசுரகுடிநீர் பவுடர் வழங்கி சால்வை அனிவித்து கௌரவித்து அனைத்து ஊழியர்களையும் அமரவைத்து சமூக ஆர்வலர் சத்தியமூர்த்தி குடும்பத்துடன் பிரியாணி உணவைப் பரிமாரினார். இது அனைத்து ஊழியர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கட்ரமணன் உள்ளிட்ட பேரூராட்சி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

sanitary workers Chidambaram Cuddalore district
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe