/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1555.jpg)
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியைச் சந்தித்து கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளிகளுக்குத் தேவைப்படும் 82 வகுப்பறைகள் குறித்த பட்டியலை வழங்கினார்.
அதிக வகுப்பறைகள் தேவைப்படும் பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும்படியும், அரசுப் பள்ளிகளில் குறிப்பாக உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரம் (Vending Machine), அவற்றை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்தி எரிக்கும் இயந்திரம் (Incinerator) ஆகியவற்றை அமைக்கக் கேட்டுக்கொண்டார்.
பெண்கள், தங்கள் பள்ளிப் படிப்பு நாட்களில் 10-20% விழுக்காடு வரை இதனால் இழப்பதாகவும் தெரியவருகிறது. இந்நிலையில் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவியர்களுக்கு நாப்கின் உள்ளிட்ட சுகாதார சாதனங்கள் எளிதில் கிடைப்பதில்லை. இதனால் அவர்களின் உடல் நலன் பாதிக்கும் அபாயம் இருப்பதுடன் அவர்களின் கல்வியும் பாதிக்கிறது. எனவே, அரசுப் பள்ளிகளில் குறிப்பாக அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரம் அவசியம் தேவைப்படுகிறது’ என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)