Advertisment

சங்கராபுரம் பட்டாசு விபத்தில் மேலும் ஒரு சிறுவன் உயிரிழப்பு!

sangarapuram fire incident update

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். காயம்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சென்னை, சேலம், முண்டியம்பாக்கம் உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சங்கராபுரம் அடுத்த பகண்டை கூட்ரோடு வாணாபுரத்தைச் சேர்ந்த பாலு என்பவரது மகன் 16 வயது சஞ்சைசிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

இந்த சிறுவனின் தாய் கன்னியம்மாள் விபத்து ஏற்பட்ட கடையில் வேலை பார்த்து வந்ததாகவும், சம்பவத்தன்று தீபாவளியை முன்னிட்டு துணி எடுத்து தருமாறு கேட்டு சஞ்சய் தனது தாயார் வேலை செய்து கடைக்கு சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட பட்டாசு தீ விபத்தில் சஞ்சய் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சங்கராபுரம் பட்டாசு விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

விபத்து நடந்த இடத்தில் உள்ள கட்டிட இடிபாடுகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் இடிபாடுகளில் இன்னும் யாராவது சிக்கி இறந்திருக்கலாம். அவர்களின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் இடிபாடுகளில் மேலும் யாராவது சிக்கி இறந்து இருக்கிறார்களா என்பதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் மீண்டும் தேடி வருகிறார்கள்.

fire incident kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe