Advertisment

நிலத்தடி நீராதாரத்தை காக்க சனிஸ்வரன் கோயில் குளத்தில் உடைகள் விடத் தடை!

திருநள்ளார் கோயில் நளன்குளத்தில் குளிப்பவர்கள் இனிமேல் உடைகளை விட்டு விட்டு செல்லக்கூடாது என அறிவித்துள்ளது கோயில்நிர்வாகம்.

Advertisment

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாரில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதிக் இருக்கிறது. சனி தோஷம் நீங்க இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள், அருகே உள்ள நளன் தீர்த்த குளத்தில் குளித்துவிட்டு உடுத்தி வந்த ஆடைகளை குளத்திலேயே விட்டு செல்வது வழக்கமாக வைத்திருந்தனர். இதனால் தீர்த்தகுளம் அசுத்தமாவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தண்ணீரை அடிக்கடி மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இதைத்தவிர்க்க பக்தர்கள் தங்கள் உடைகளை குளத்தில் விட்டுச் செல்வதற்கு கோயில் நிர்வாகம் தடை விதிக்க முடிவு செய்துள்ளது.

Advertisment

thirunalaru

இதுகுறித்து கோயில் நிர்வாகம் கூறுகையில், " நளன் தீர்த்த குளத்தில் நீராடும் பக்தர்கள் தாங்கள் உடுத்திவந்த ஆடைகளை அப்படியே விட்டுச்செல்வதால் தண்ணீர் மாசடைந்து, தூர்நாற்றம் வீசத்துவங்கிவிடுகிறது. அதனால் அடிக்கடி தண்ணீரை மாற்ற வேண்டி நிர்பந்தம் ஏற்படுகிறது. அதோடு நிலத்தடி நீராதாரமும் குறைந்து வருகிறது. எனவே குளத்தின் புனிதத்தன்மையை காக்கவும், நிலத்தடி நீர் விரயமாவதை தடுக்கவும் பக்தர்கள் வரும் 1ம் தேதி முதல் குளத்தில் ஆடைகளை கலைந்துவிடுவதை தடை விதிக்க தேவஸ்தான நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகமும் முடிவெடுத்துள்ளோம், " என கூறியிருக்கிறார்கள்.

restricted temple thirunallar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe