Advertisment

வீட்டில் சந்தனக்கட்டை பதுக்கல்; முதியவர் கைது

Sandalwood hoarding at home; The old man was arrested

கோப்புப்படம்

ஈரோட்டில் வீட்டில் 15 கிலோ சந்தனக்கட்டை பதுக்கிய முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அரசபுரம் கே.என். பாளையம் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பங்களாபுதூர் போலீசார் அங்கு ரோந்து சென்று பெருமாள் என்ற கட்டப்பெருமாள் என்பவரதுவீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் 15 கிலோ எடை கொண்ட சந்தனக் கட்டை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பெருமாளை போலீசார் பிடித்து சந்தனக்கட்டையுடன் அவரை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Advertisment

பெருமாளிடம் வனத்துறையினர் சந்தன மரம் எங்கு வெட்டப்பட்டது. எந்தெந்த பகுதியில் சந்தன மரங்கள் வெட்டப்படுகிறது. எங்கெல்லாம் சந்தன மரம் விற்பனை நடக்கிறது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Erode police Sandalwood
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe