Skip to main content

பள்ளி வேனில் மணல் கடத்தல்... ரூம் போட்டு யோசிப்பாங்களோ என அதிர்ந்த சமூக ஆர்வலர்கள்!!!

Published on 26/07/2018 | Edited on 26/07/2018
school van

 

 

ஒவ்வொரு நாளும் விதவிதமாக மணல் கடத்தல்  நடப்பதைக் கண்டு காவலர்களே மண்டையை சொரிந்து வருகின்றனர்.
 

கடந்த சில மாதங்களாக மணல் தட்டுப்பாட்டை சாதகமாக்கிக் கொண்டு பல்வேறு விதமான முறையில் மணல் கடத்தலை செய்து வருகின்றனர் மணல் கடத்தல்காரர்கள். ஆரம்பத்தில் லாரிகள் மூலம் கடத்தினர், பின் அது சற்று குறைந்து அ.தி.மு.க பெரும்புள்ளிகள் மட்டுமே செய்து வருகின்றனர். 

 

 


லாரிகளைத் தொடர்ந்து டிராக்டர், மாட்டு வண்டி, டாட்டா ஏஸ் உள்ளிட்ட வண்டிகளில் மணல் கடத்தலை செய்தனர். அதன்பிறகு இரண்டு சக்கர வாகனத்தில்  சாக்கு மூட்டையாக கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். இது காவல் துறைக்கு தெரிந்தும், தெரியாமலும் கனகச்சிதமாக நடந்து வருகிறது. 


இந்த நிலையில் தண்ணீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து மணல் தேவைக்கு வரும் நாட்களில் தட்டுப்பாடு அதிகமாகி விடும் என்பதால் ஆறுகள், குளங்கள், ஏரிகளில் இரண்டு நாட்களாக மணல் கொள்ளை நடக்கிறது.  செவ்வாய் கிழமை கும்பகோணம் பகுதியில் சொகுசு காரில் மணல் கடத்துவது காக்கிகளுக்கு தெரிந்து  பிடித்தனர், அதேநாள் மதியம் ஜீப் மூலம் மணல்கடத்துவதை பிடித்தனர்,

 

 


ஒரு வாரத்திற்கு முன்பு மயிலாடுதுறை மருத்துவமனை அம்புலன்சில் ஆற்றில் இருந்து மணல் ஏற்றி வந்ததை பொதுமக்கள் பார்த்து விட்டு முகத்தில் விரல் வைத்தனர். இப்படிபட்ட நிலையில் தண்ணீர் வருகையால் ஆறுகளில் அபாய எச்சரிக்கை பலகை வைத்து வருகின்றனர். அப்படி வந்தபோது கும்பகோணம் அருகே உள்ள குடமுருட்டி. ஆற்றில் இருந்து  நள்ளிரவு 1 மணிக்கு பள்ளி வேன் கரையேறிதை கண்டு வளைத்து பிடித்தனர். அதில் சாக்கு மூட்டையில் மணல் கட்டி அடுக்கியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த வேனில் 150 மூட்டை மணல் இருந்துள்ளது. வேனையும், மணல் மூட்டையைும் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்துள்ளனர்.

 

 


நாடு இந்த மாதிரி ஆகிடுச்சே, திருடுவதற்கு ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ என சமுக ஆர்வலர்கள் கவலை அடைகின்றனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

கொள்ளிடம் ஆற்றில் மாயமான மாணவர்கள்; சடலமாக மீட்பு!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
3 students missing who bathed in Kollidam river

கொள்ளிடம் ஆற்றில் குளித்த 3 மாணவர்கள் மாயமாகியுள்ளனர்.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 8 மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் சென்னையில் இருந்து தஞ்சாவூர் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுள்ளனர். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். அப்போது வழியில் அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மாணவர்கள் குளித்துள்ளனர். அச்சமயம் மாணவர்கள் பச்சையப்பன் என்பவர் ஆற்றில் சிக்கிக்கொண்டார்.

இதனையடுத்து மற்ற மாணவர்கள் பச்சையப்பனை காப்பற்ற முயன்று ஆற்றில் இறங்கியுள்ளனர். இதனால் பச்சையப்பனுடன் 8 மாணவர்களும் ஆற்றில் சிக்கிக் கொண்டனர். இதனைக் கவனித்த பொது மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 3 பேரை காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் காணாமல் போன 3 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.  இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.