Advertisment

மணல் கடத்தல் புகார்... முன்னாள் திமுக நிர்வாகியை பிடிக்க 3 தனிப்படை!

sand

திருச்சிமுத்தப்புடையான்பட்டியில் மணல் கடத்தல் சம்பவத்தில்மணல் கடத்தலில்ஈடுபட்ட வாகனத்தை மணப்பாறை காவல் ஆய்வாளர் அன்பழகன் விடுவித்ததற்காக அவரை சஸ்பெண்ட் செய்து திருச்சி டிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை விடுவிக்க வேண்டும் என போலீசாரை ஆரோக்கியசாமி என்பவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.திமுக நிர்வாகியாக இருந்த ஆரோக்கியசாமி மீது மணல் கடத்தல் புகார்கள் எழுந்த நிலையில், ஏற்கனவே அவரை திமுக சஸ்பெண்ட் செய்திருந்தது.

Advertisment

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் நிலையில், மணல் கடத்தலில் ஈடுபட்ட கார்த்திகேயன், பவுல்சேகர்,மனோகர் உள்ளிட்ட5பேர்நேற்று (16.07.2021) கைது செய்யப்பட்டதையடுத்து, மணல் கடத்தலில் ஈடுபட்டு போலீசாரை மிரட்டிய புகாரில் திமுக முன்னாள் நிர்வாகி ஆரோக்கியசாமியைபோலீசார் தேடிவருகின்றனர். இந்நிலையில், தேடப்பட்டுவரும் திமுக நிர்வாகி ஆரோக்கியசாமியைபிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

police Sand robbery thiruchy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe