/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/manal.jpg)
கோவையில் உள்ள நொய்யல் ஆற்றில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக மாட்டுவண்டி , லாரிகளில் மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நொய்யல் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டு இருந்தார். இருந்தபோதிலும் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனால் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது நொய்யல் ஆற்றில் இருந்து லாரி மூலமாக மணல் கடத்தி வந்தவர்களை உக்கடம் பகுதியில் வைத்து தாசில்தார் மடக்கி பிடித்தனர். அப்போது அவரிடம் விசாரிக்கையில் லாரியில் வந்தவர்கள் தப்பி ஓடினர். இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்து பந்தய சாலை காவல் நிலையத்தில் வைத்து உள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)