Thirumavalavan

கும்பகோணம் அருகே சோழபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

அப்போது அவர் கூறியதாவது,

பள்ளிக்கூடங்களில் மாணவ- மாணவிகளுக்கு சத்துணவில் வழங்கப்பட வேண்டிய முட்டைகள் வெளிச்சந்தையில் விற்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பெரும் ஊழல் நடைபெறுகிறது. இந்த முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் கடத்தல் அதிகளவில் நடைபெறுகிறது. மணல் கடத்தலில் அமைச்சர்கள் வரை பங்குண்டு. இது குறித்தும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாடு நடைபெற உள்ளது. இதில் ராகுல்காந்தி கலந்து கொள்வார். அவருடைய தேதி கிடைத்த பிறகு மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு கூறினார்.

Advertisment