காவிரியில் தண்ணீர் இருந்தவரை மணல் கொள்ளையை நிறுத்தி வைத்திருந்த மணல் கொள்ளையர்கள் தற்போது தண்ணீர் வரத்து குறைய ஆரம்பித்ததால் திருவெறும்பூர் பகுதியில் காவிரி மற்றும் கல்லணை கால்வாய் ஆற்றில் நாள்தோறும் அதிக அளவில் மணல் கொள்ளையடிக்க ஆரம்பித்துள்ளனர்.

Advertisment

இந்த மணல் கொள்ளைக்கு அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் போலீசும் உறுதுணையாக இருந்து தான் நடக்கிறது என்பது பொதுமக்களின் பரவலான குற்றசாட்டு.

ஆளும் அரசியல் அதிகாரிகளின் சிபாரிசு இருப்பதால் பல இடங்களில் மணல் அள்ளி வரும் லாரிகள், டிராக்டர்கள், மினி லாரிகளை சில சமயம் திருவெறும்பூர் வருவாய்துறையினர் பிடிப்பதை போலீஸ் வேறு வழியின்று வழக்கு பதிவு செய்கின்றனர்.

இந்நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள கீழமுல்லைக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து அரசு அனுமதியில்லாமல் மணல் எடுத்து கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தனர். இந்த சம்பவம் பற்றி திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் மதனுக்கு செல்போன் மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 5-ந் தேதி அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மணலை பறிமுதல் செய்தார்.

Advertisment

இந்த நிலையில் திருவெறும்பூர் பகுதியில் உள்ள நசீர்பாட்சாவை மணல் கொள்ளையர்கள் தாக்கியிருக்கிறார்கள் எதற்காக தாக்கினார்கள் என்று விசாரித்தால், காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் நசீர்பாட்சா இவர் அந்தப் பகுதியில் நடைபெறும் குற்றச்செயல்கள் பற்றி அரசு அதிகாரிகளுக்கு புகார் கடிதம் போடுவாராம். அதனால் இவர்தான் திருவெறும்பூர் போலீசாருக்கு மணல் பதுக்கி வைத்திருப்பது பற்றி தகவல் கொடுத்திருக்க கூடும் என்று கருதி மணல் பதுக்கல் கும்பலை சேர்ந்த மாதவன், ஆல்பர்ட் ஆகிய இருவரும் சேர்ந்து நசீர்பாட்சாவை கொலை வெறி தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில் பலத்த காயமடைந்த நசீர்பாட்சா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுகுறித்து நசீர்பாட்சா திருவெறும்பூர் போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாதவன், ஆல்பர்ட் ஆகிய இருவரையும் திருவெறும்பூர் போலீசார் தேடி வருகின்றனர். இன்ஸ்பெக்டருக்கு மணல் கடத்தல் பத்தி தகவல் சொன்னவர் தாக்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.