மணல் கடத்தலை தடுத்த இரண்டு பெண் வருவாய் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு. 

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம், வாலாஜாபேட்டை ஆகிய பகுதிகளில் பாலாற்றில் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஆற்றில் இருந்து மணலை கொண்டு வந்து பல்வேறு பகுதிகளில் மறைவாக கொட்டிவைத்து பின்பு அதனை சென்னைக்கு கடத்தி சென்று ஒரு யூனிட் 20 ஆயிரம் என்கிற விலையில் விற்பதாக தகவல் கிடைத்தது.

sand conduction

அதன் அடிப்படையில் காவேரிப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் திவ்யா, வாலாஜா வருவாய் ஆய்வாளர் சோனியா ஆகியோர் தலைமையிலான கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் குழுவினர் கடந்த அக்டோபர் 13, 14 என இரண்டு தினங்களாக 36 மணி நேரம் இரவு பகலாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் 29 டிப்பர் லாரிகளில் மணல் கடத்த தயார் நிலையில் இருப்பதை கண்டறியப்பட்டது. இதில் சென்னைக்கு கடத்தப்படவிருந்த 31 லட்சம் மதிப்புள்ள 155 யூனிட் மணலை அதிகாரிகள் டிப்பர் லாரிகளுடன் பறிமுதல் செய்தனர்.

அந்த மணலை அள்ளிய இடத்திலேயே கொட்டவைத்தனர், கொட்டிய பல வாகனங்கள் சென்றுவிட்டன. சில வாகனங்களை மட்டும் பறிமுதல் செய்துள்ளனர். மணல் கொள்ளை விவகாரத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் துணிச்சலாக செயல்பட்ட பெண் அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பாராட்டியதாக கூறப்படுகிறது.

Sand robbery Vellore
இதையும் படியுங்கள்
Subscribe