Tamizhaga Vazhvurimai Katchi

மணல் கொள்ளையை தடுக்க கோரி உண்ணாவிரதம் இருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒன்றிய செயலாளரை போலிசார் கைது செய்தனர்.

Advertisment

கடலூர் மாவட்டம், வேப்பூர் பகுதியில் உள்ள, மணிமுத்தார், கோமுகி, மயூரா ஆறுகளில் தொடர்ந்து மணல் கொள்ளை நடப்பதை கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், 11ந் தேதி விழிப்புணர்வு போராட்டம் நடத்த தமிழக வாழ்வுரிமை கட்சி நல்லூர் ஒன்றிய செயலாளர் சிவக்குமார் வேப்பூர் காவல் நிலைத்தில் அனுமதி கேட்டுள்ளார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அதற்கு போலிசார் நேற்று முன்தினம் 9ந் தேதி அனுமதி மறுத்து கடிதம் கொடுத்துள்ளனர்.அதனால் ஆர்பாட்டம் செய்யாமல் 11ந் தேதி இன்று காலையில் தனியாக. வேப்பூர் கூட்டுரோட்டில் மணல் கொள்ளயை தடுக்காத, போராட்டம் நடத்த அனுமதி வழங்காத வேப்பூர் போலிசாரை கண்டித்து காலை 7 மணி முதல் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

Advertisment

இந்நிலையில் காலை பத்து மணி அளவில் உண்ணாவிரதம் மேற்கொண்ட சிவக்குமாரை வேப்பூர் போலிசார் கைது செய்தனர்.