Skip to main content

சட்டவிரோத மணல் கொள்ளைக்கு எதிரான கடை அடைப்பு போராட்டம் 100 சதவீதம் வெற்றி! 

Published on 29/11/2018 | Edited on 29/11/2018
Kulithalai



இன்று குளித்தலையில் சட்டவிரோதமாக செயல்படும் மணல்தட்டை மணல் குவாரிகளுக்கு எதிராக கடை அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து கட்சியின் சார்பிலும் சமூக ஆர்வலர்கள் இணைந்து அறிவித்து இருந்தனர். 
 

இந்த போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குளித்தலையில் உள்ள முக்கிய வீதிகளில் கடைகளை அடைத்து பொதுமக்கள் மணல் கொள்ளைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 
 

இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய முகிலன், இந்த சட்ட விரோத மணல் குவாரிக்கு எதிராக 100 சதவீத மக்கள் தங்கள் ஆதரவை கொடுத்திருக்கிறார்கள் . காவிரியில் மணல் இருந்தால் தான் மனிதன் உயிர் வாழ முடியும். இந்த மணல் குவாரி இயங்கினால் பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் இல்லாத சூழ்நிலை ஏற்படும்.


எனவே இப்போதாவது தமிழக அரசு உணர்ந்து இந்த சட்ட விரோத குவாரியை மூட வேண்டும் என்றார். மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதனால் இனி காவிரிக்கு தண்ணீர் வருமா என்பதே சந்தேகம் தான். இந்த நிலையில் தற்போது உள்ள மணல் குவாரிகளை உடனே மூட உத்தரவிட வேண்டும் என்றார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குளித்தலையில் பரபரப்பு; போலீசாரை கண்டித்து சாலை மறியல்

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

People blocked the road in Kulithalai to condemn the police

 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டுமருதூரைச் சேர்ந்தவர் விவசாய கூலித் தொழிலாளி ஆறுமுகம்(70). இவர் நேற்று மாலை மேட்டுமருதூரில் இருந்து பணிக்கம்பட்டிக்குச் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பருடன் கூடிய டிராக்டர் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.  உடலைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இந்த நிலையில், இன்று முதியவரின் உடல் குளித்தலை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்ய இருந்த நிலையில், அங்கு வந்த போலீசார் அடையாளம் தெரியாத வாகனம் என வழக்குப் பதிவு செய்திருந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசாரைக் கண்டித்து திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியலைக் கைவிட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

 

Next Story

‘தீண்டாமை பாகுபாடுகளை அறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’ - விசிக ஆர்ப்பாட்டம்

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

vck members struggle at Kulithalai

 

தீண்டாமை பாகுபாடுகளை அறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்து விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

 

கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றிய விசிக சார்பில் நேற்று, குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு, குளித்தலை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், குளித்தலை ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் தீண்டாமை பாகுபாடுகளை அறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,  மெத்தனமாக செயல்படும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், குளித்தலை பேருந்து நிலைய விரிவாக்க பணி முடிந்தும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

 

விசிக ஒன்றிய செயலாளர் மாயவன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.