Advertisment

வைகையில் மணல் குவாரி.. ஜீலை24 ல் கடை அடைப்பு..!        

puthu

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகையாற்றில் மணல் அள்ளவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மானாமதுரை, தெ.புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஜூலை24 ல் கடைஅடைப்பு போராட்டத்தினை அறிவித்துள்ளனர். மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை, செய்களத்தூர்,வாகுடி ஆகிய கிராமத்திற்குட்பட்ட வைகைஆற்றில் மணல் அள்ள தமிழக அரசு முடிவெடுத்துள்ளனர். தெ.புதுக்கோட்டை பகுதியில் மணல் அள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது.

Advertisment

மானாமதுரை பகுதியிலிருந்து வைகை ஆற்றிலிருந்து குடி தண்ணீர் எடுக்கப்படுகிறது. 72 குடிநீர் திட்டங்களிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு கோடி லிட்டர் தண்ணீர் எடுத்து பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் ஆகி கொண்டிருக்கிறது. தற்போது ராஜகம்பீரம் அருகேயிருந்து வைகைஆற்றிலிருந்து மானாமதுரை நகருக்கு விநியோகம் ஆகி கொண்டிருக்கிறது. மானாமதுரைக்கு விநியோகம் ஆகிற குடிதண்ணீர் நீர்வளம் படுபாதளத்திற்கு சென்றுவிட்டது. இதன் காரணமாக மானாமதுரை நகர் மக்களுக்கு குடிதண்ணீர் விநியோக நேரம் குறைந்துவிட்டது. இதே போன்றுதான் கடலாடி கூட்டுக்குடிநீர் திட்டமும் நீர் ஆதாரம் குறைந்திருக்கிறது. இது போன்ற சூழ்நிலையில் இருக்கிற மண் வளத்தை அள்ள அரசு அனுமதி கொடுத்துள்ளனர்.

Advertisment

tp

தெ.புதுக்கோட்டை அருகே வைகை ஆற்றில் பி.ஆலங்குளம் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளது. இத்திட்டத்தில் தெ.புதுக்கோட்டை, சின்னபுதுக்கோட்டை, முட்டைக்குறிச்சி, கோச்சடை, கணையனேந்தல், ஆலம்பச்சேரி, கோவானூர், மேலநெட்டூர்ஒரு பகுதி, ஆலங்குளம், நல்லாண்டிபுரம்,தெற்குசந்தனூர், எஸ்.காரைக்குடி, வடக்குசந்தனூர், அரியனூர், வண்ணான்ணோடை, செய்யாங்கோட்டை, புவனேந்தல் ஆகிய கிராமங்களுக்கு குடி தண்ணீர் விநியோகம் பாதிப்படைந்துள்ளது. இதே போன்று 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட தெ.புதுக்கோட்டை குடிநீர் தொட்டியில் பத்தாயிரம் லிட்டர் தண்ணீர்கூட நிரம்புவதில்லையென என்ற குற்றச்சாட்டும் உண்டு. பிராமணக்குறிச்சியில் உள்ள 10 ஆயிரம் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலைத் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பவில்லை. 30ஆயிரம் கொள்ளளவு கொண்ட கீழப்பெருங்கரை மேல்நிலைத்தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. மேல்நிலைத் தண்ணீர் தொட்டி மட்டுமல்ல இப்பகுதியில் உள்ள போர்வெல் கிணறுகளில் தண்ணீர் இல்லாத நிலை உருவாகியிருக்கிறது.

போராட்டம் எவ்வளவு நடந்தாலும் பரவாயில்லை மணல் அள்ளியே தீருவோம் என தமிழக அரசு தீர்மானித்து தெ.புதுக்கோட்டை அருகே வைகையில் மணல் அள்ள டெண்டர் விட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.தவிர அனைத்து கட்சியினரும் வரும் ஜீலை 24 ல் மானாமதுரை, தெ.புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடைஅடைப்பு தெரிவித்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க உள்ளனர்.

the puthukottai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe