vaiko

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக தலைவர் வைகோ பேசுகையில்,

Advertisment

மதிமுக சார்பில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய நிவாரணப்பொருட்கள் அனுப்பிவைக்கப்படும். கொள்ளிடம் முக்கொம்பு அணையின் 9 மதகுகள் உடைந்திருப்பதும் அதற்கு மேற்பட்ட மதகுகள் உடைந்து விடுமோ என்ற பயத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே பராமரிப்பு பணிகள் அத்தனை பழமையானஅணைகளுக்கும் முறையாக செய்யப்படவேண்டும். மணல் கடத்துவது, மணல் கொள்ளையடிப்பது போன்றவற்றால்தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

தற்போது 410 கோடியில் புதுதடுப்பணை கட்டப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதேபோல்தான் 410 கோடியில் உடனே தடுப்பணை கட்டப்படும் என ஜெயலலிதா அறிவித்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது இன்னும் எந்த பணிகளும் நடக்கவில்லை அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாகவே இருப்பது வேதனை அளிக்கிறதுஎனக்கூறினார்.