Advertisment

நெடுவாசலில் ஒரு சரணாலயம்.. ஆலமரத்தில் கொத்து கொத்தாய் தொங்கும் ஆயிரக்கணக்கான வெளவால்கள்

nv

நெடுவாசல் வடக்கு கிராமத்தில் ஆலமரங்களில் கொத்து கொத்தாய் தொங்குகிறது ஆயிரக்கணக்கான வெளவால்கள். இயற்கையாய் அமைந்த பறவைகள் சரணாலயத்தை மக்கள் போற்றி பாதுகாக்கிறார்கள்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் வடக்கு கிராமம். அரசு நடுநிலைப் பள்ளி அருகில் வெள்ளையப்பன் சாமி கோயில் காடு உள்ளது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள காட்டின் நடுவில் சுடுமண் சுவாமி சிலைகளே உள்ளது. காட்டிற்குள் செல்ல ஒத்தடையடிப் பாதை அதுவும் எப்போதாவது பக்தர்கள் தரிசனத்திற்கு வரும் போது மட்டும் பாதை ஒதுக்கப்படுகிறது வழக்கம். காட்டுக்குள் எங்கும் பட்சை போர்வை போர்த்தியது போல ஆலமரங்கள். ஒற்றை ஆலமரம் இருந்து தற்போது விழுகளே மரங்களாக எழுந்து நிற்கிறது. பழமையான இந்த ஆழமரத்தில் விழுதுகள் பாலடைந்த கட்டிடங்கள் போல காட்சி அளிக்கும். மற்றம் பலவகையான பழமரங்கள் முள் செடிகள் நிறைந்த அடர்ந்த காடு அது.

Advertisment

இந்த கோயிலுக்கு அந்த கிராம மக்கள் மட்டுமின்றி சிவகங்கை மாவட்டத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து தங்கி இருந்து ஆடு, சேவல் அறுத்து அங்கேயே சமைத்து உண்டு செல்வதும் வழக்கமாக உள்ளது. அந்த காட்டுக்குள் பட்டு கிடக்கும் மரங்க் கிளைகளைக் கூட யாரும் எடுப்பதில்லை. அவ்வளவு பாதுகாப்பான காடாக உள்ளது.

அந்த காட்டில் ஆலமரத்தில் பழங்கள் பழுக்கும் நேரங்களில் பலவகையான பறவைகளும் வந்து தங்கி செல்கிறது. ஆனால் வெளவ்வால்கள் மட்டும் பல வருடங்களாக நிரந்தரமாகவே தங்கிவிட்டது. சுமார் 50 ஆயிரம் வெளவால்கள் காடு முழுவதும் படர்ந்துள்ள ஆலமங்களில் கொத்துக் கொத்தாக தொங்கிக் கொண்டு சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கிறது. காட்டுக்குள் ஏதேனும் சத்தம் கேட்டால் உடனே மொத்தமாக பறந்து வெளியேறி மீண்டும் உள்ளே வந்த தொங்குகிறது. அதே மரங்களில் தேனிக்களும் பெரிய பெரிய கூடுகளில் இருந்தாலும் அந்த தேனிக்களால் வெளவால்களுக்கு தொல்லை இல்லையாம்.

இது குறித்து அந்த பகுதியி பொதுமக்கள் கூறும் போது.. இது வெள்ளையப்பன் கோயில் காடு. இந்த சக்தியுள்ள கோயிலுக்கு வெளியூர் ஆட்களும் வந்து தங்கி ஆடு, கோழி சமைத்து சாப்பிட்டு செல்வார்கள். இந்த காட்டில் உள்ள ஆலமரங்களில் பழங்கள் பழுக்கும் காலத்தில் பல்வேறு வகையான பறவைகள் வந்து செல்லும். அப்போது அதன் சத்தம் ரொம்ப அருமையாக இருக்கும். அந்த சத்தங்களை எங்கள் கிராம மக்கள் ரசித்திருகிறோம். அதே போல சுமார் 300 வருடங்களுக்கு மேலாக வெளவால்கள் வந்து தங்கி உள்ளதாக எங்களின் முன்னோர்கள் சொல்கிறார்கள். வெளவால்களுக்கு தொல்லை கொடுத்து விரட்டிவிடக் கூடாது என்பதற்காக அந்த காட்டுப் பகுதியில் வெடி வெடிப்பதில்லை. புகை மூட்டம் வராமல் பார்த்துக் கொள்வோம். சுமார் ஒரு லட்சம் வெளவால்கள் இருக்கலாம். அதே போல யாரையும் வேட்டையாடவும் அனுமதிப்பதில்லை. தெரியாமல் வேட்டையாட வந்தாலும் கிராம மக்கள் யார் பாத்தாலும் எச்சரித்து அனுப்பிவிடுவோம்.

இந்த வெளவால்கள் மாலை 5 மணிக்கு பிறகு இரைதேடி வெளியே செல்லும் குறைந்தது 25 கி.மீ. வரை இரவில் பயணம் செய்து இரை தேடிக் கொண்டு அதிகாலை 4 மணி முதல் வரத் தொடங்கிவிடும் பொழுது விடியும் முன்பு அனைத்து வெளவால்களும் ஆலமரத்துக்கு வந்துவிடும். முhலையில வெளியே செல்லும் போதும் காலையில் வந்து சேரும் நேரத்திலும் அந்த வெளவால்கள் எழுப்பு சத்தம் கிராமம் முழுவதும் கேட்கும். அதுவே அழகான சத்தமாக இருக்கும். முன்பு அந்த சத்தம் கேட்டு தான் விசாயிகள் தங்கள் வயல்களுக்கு வேலைக்கு சென்றுள்ளார்களாம். ஆதிகாலை எழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தூங்கப் போகும் நாங்கள் அலாரம் வைப்பதில்லை வெளவால்களின் சத்தமே எங்களை எழுப்பி விடும்.

எந்த சூழ்நிலையிலும் இயற்கையாக அமைந்த இந்த பறவைகள் சரணாலயத்தை பாதுகாப்பாக வைத்திருப்போம் என்றனர்.

bats hanging Nedumangalam Thousands
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe