Advertisment

'விஜய் படத்தில் சனாதனம்?'-விசிக எம்பி ரவிக்குமார் கேள்வி

'Sanathanam in Vijay's film?'-VCK MP Ravikumar asked

இயக்குநர்வெங்கட் பிரபு நடிகர்விஜய்யை வைத்து இயக்கியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Advertisment

இப்படத்தில் விஜய் டி.ஏஜிங் தோற்றத்திலும், ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் மறைந்த விஜயகாந்த்தையும் நடிக்க வைத்துள்ளனர். மேலும் மறைந்த பாடகி பவதாரணியின் குரலை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஒரு பாடலுக்கு பயன்படுத்தி பாடவைத்துள்ளனர். இன்று திட்டமிட்டபடி படம் வெளியாகியுள்ளது. விஜய்யின் அரசியல் அறிவிப்புக்கு பின் வெளியாகும் முதல் திரைப்படம் என்பதால் விஜய் ரசிகர்கள் மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் திரைப்படத்தைப் பார்த்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’? என கேள்வி எழுப்பி விசிக எம்பி ரவிக்குமார் சமூகவலைத்தள பக்கமான எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், 'விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’?

The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? ‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்! ‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா? எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொல்.சொல். 157)' என குறிப்பிட்டுள்ளார்.

ravikumar vck
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe