ADVERTISEMENT

சனாதன விவகாரம்; ‘உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது’ - அமைச்சர் சேகர்பாபு தரப்பு

06:27 PM Nov 07, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சனாதன விவகாரம் தொடர்பான வழக்கு உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தரப்பு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சனாதன விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ - வாரண்டோ வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் சேகர் பாபு தரப்பு வாதத்தை முன்வைக்கையில் “இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். ஒரு போதும் மனிதனால் உருவாக்கப்பட்ட சனாதனத்தை ஏற்க முடியாது. பரந்து விரிந்த இந்து மதத்தை சனாதனம் என்ற சிறிய வட்டத்திற்குள் சுருக்க முடியாது. மனு ஸ்மிருதியை அடிப்படையாக கொண்டுள்ள சனாதன தர்மத்துக்கு எதிராக பேசியதில் எந்த தவறும் இல்லை. மனு ஸ்மிருதிக்கு எதிராக பேசுவது எப்படி நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாக அமையும். ஆரியர்களுக்கான சட்டம் ஆரியர்களுக்குத்தானே தவிர தமிழர்களுக்கு அல்ல.

கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் தனக்கு எதிராக உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்திற்கு விரோதமான வழக்கை தாக்கல் செய்தவருக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும்” என வாதம் முன் வைக்கப்பட்டது. இதையடுத்து திமுக எம்.பி. ஆ.ராசா தரப்பு வாதத்திற்காக வழக்கை நாளைய (08.11.2023) தினம் ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT