Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

“என்னமோ நடக்குது மர்மமா இருக்குது” 35 நாட்கள்... பூட்டிய அறையில் இந்தியாவின் தலையெழுத்து

indiraprojects-large indiraprojects-mobile

தேர்தல் கமிஷன் தொடர்ச்சியாக எதிர்கட்சியினரை குறிவைத்து சோதனையிட்டுவந்தது. இந்நிலையில் தேர்தல் முடிந்தவுடன்  தமிழகத்தின் அனைத்து தரப்பினரின் “எப்படி இவர்களை நம்பி 35 நாட்கள் நாம் ஓட்டளித்த ஓட்டு பெட்டி பத்திரமாக இருக்கும் அதில் ஏதாவது கோல்மால் செய்துவிடுவார்களோ” என்ற பேச்சு அடங்குவதற்குள் வாக்களித்து இரண்டாவது நாளிலேயே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவ கல்லூரி வளாகத்தில் மதியம் 3 மணிக்கு கலால்வரி தாசில்தாரான சம்பூர்ணம் என்ற பெண் அதிகாரி தலைமையில் 4 பேர் உள் சென்று மாலை 5.30 மணிக்கு சில ஆவணங்களுடன் வெளியேவந்தனர் என குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. 

 

sampooranam

 


இந்த தகவலை அடுத்து பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் வேட்பாளர்கள் மருத்துவ கல்லூரியில் கூடி தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது இன்றைகான சிசிடிவி காட்சிகள் வேண்டும் என திமுக கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசன் தரப்பில் கேட்கப்பட, அதிராகரிகள் தரப்பு சிசிடிவி கேமரா செயல்படவில்லை என  கூறியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது வெளியில் உள்ள எதிர்க்கட்சி தரப்பினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு திரண்ட கட்சிக்காரர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணாவில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு நேரம் ஆக ஆக திமுக கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களும் அங்கு குவிய தொடங்கினர். அனைத்து கட்சி வேட்பாளர்களும் அங்கிருந்தனர் அதிமுக வேட்பாளரை தவிர இது அங்கிருந்தவர்களுக்கு சந்தேகத்தை அதிகபடுத்தியது.


சிறிது நேரத்தில் காரில் வந்து இறங்கிய நான்கு இளைஞர்கள் போலீஸாரிடம் ஏதோ சொல்ல, அவர்களை மட்டும் உள்ளேவிட முற்பட அங்கிருந்தவர்கள் அவர்களை இழுத்து யார் என்று விசாரித்தனர். அப்போது அவர்கள், தாங்கள் சி.சி.டி.வி இன்ஜினியர்கள் அமைச்சர் வீட்டிலிருந்து வருகிறோம் என்று ஒருவரும். இன்னொருவர் மெடிக்கல் காலேஜ் மாணவர்கள் என்றும் முன்னுக்கு பின் முறனாக பதில் கூறியுள்ளனர். அதனால், அங்கிருந்தவர்கள் அவர்களை அடையாள அட்டையை காண்பிக்கும்படி  கேட்டுள்ளனர். இதனால், அங்கு கைகலப்பாகி அவர்களுக்கு தர்ம அடி விழுந்துள்ளது. அதற்குள் காவல்துறை தலையிட்டு அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டுவந்தனர்.

 

sampooranam

 

உள்ளே சென்ற வேட்பாளர் சு.வெங்கடேசன் கூறுகையில், “மதுரை மருத்துவக் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்பில் உள்ளது. இங்கு மதியம் பெண் அதிகாரி ஒருவர் மாவட்ட ஆட்சியரின் எந்தவித அதிகாரப்பூர்வமான அனுமதியும் இல்லாமல் அவராக உள்ளே வந்து மூன்றாவது மாடியில் உள்ள ஒரு அறைக்கு சென்று உள்ளே உள்ள ஆவணங்களை எடுத்து வெளியே உள்ள ஜெராக்ஸ் கடையில்  ஜெராக்ஸ் எடுத்துள்ளார். அவர் மூன்று மணி நேரம் உள்ளே இருந்துள்ளார். இந்த தகவல் அங்கிருக்கும் காவலர் ஒருவர் எனக்கு தகவல் தெரிவிக்கவே உடனே நான் ஆட்சியரிடம் தகவலை தெரிவித்தேன். ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து உயர் அதிகாரிகள் வந்து இவர் அதிகாரிதான் என்று சொல்லி விட்டு  அவரை அழைத்து சென்றுவிட்டனர். ஆனால் எந்தவித அதிகாரப்பூர்வ அனுமதியும் இல்லாமல் இவர் மூன்று மணி நேரத்திற்கு மேலாக இங்கே இருந்திருக்கிறார். எப்படி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள இடத்தில் ஆட்சியரின் அதிகாரபூர்வமான அனுமதி இல்லாமல் உள்ளே வந்தார். உள்ளே வந்து அவர் என்ன செய்தார் என்று எங்களுக்கு தெரியவேண்டும். எங்களுக்கு சிசிடிவி காட்சி வேண்டும். எப்போது வந்தார் எப்போது சென்றார் என தெரிய வேண்டும். ஆவணங்களை ஏன் ஜெராக்ஸ் எடுக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆவணங்களை ஏன் ஜெராக்ஸ் எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வந்து நேரில் பதில் சொல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். அதற்கு அவர் கட்டாயம் அந்த அதிகாரியிடம் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதி அளித்தார். எல்லாம் பயந்தது போலவே நடந்துவிட்டது இன்னும் 32 நாட்கள் எப்படி தள்ளபோகிறோம் என்று பயமாக இருக்கிறது” என கூறினார்.

 

sampooranam

 

டேவிட்அண்ணாதுரையோ முதலில் சி.சி.டி.வி காட்சிகள் அழிந்துவிட்டது என்றார். பிரச்சனை பெரிசாக காட்சிகளை போட்டு காண்பித்தார். அந்த பெண் உள்ளே சென்று ஆவணங்கள் உள்ள அறையில் செல்வது, பின்பு மூன்றுமணிநேரம் கழித்து வெளியே வருவது. வரும்போது கையில் கட்டு கட்டாக ஆவணங்களுடன் வெளியே வரும் காட்சிகள் தெரிகின்றது. என் கேள்வி இதுதான் யார் சொல்லி அவர் உள்ளேவந்தார். எப்படி அவரை உள்ளேவிட்டார்கள். அதுமட்டுமின்றி அவர் வரும்போது யாருமே அவரை வழிமறிக்கவில்லை என்பது எங்களுக்கு சந்தேகத்தை அதிகரிக்கசெய்கிறது. இது சாதாரண விஷயம் இல்லை. ‘என்னமோ நடக்குது மர்மமா இருக்குது’ மோடி வித்தையை காண்பிக்க ஆரம்பித்துள்ளார் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.ஆட்சியர் நம்மிடம் தெரிவிக்கையில், “உதவி தேர்தல் அதிகாரி சம்பூர்ணம் ஓட்டு பெட்டி உள்ள அறைக்கு செல்லவில்லை. சீல் வைக்கபடாத ஆவணங்கள் உள்ள அறைக்குதான் சென்றுள்ளார்” என்று நம்மிடம் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து தலைமை தேர்தல் கமிஷனுக்கு விளக்கமளித்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாஹூ “சம்பூர்ணா என்ற பெண் அதிகாரியை இடைநீக்கம் செய்துள்ளோம். மேற்படி அவர் ஏன் அங்கு போனார், யார் சொல்லி எதற்காக பாதுகாக்கபட்ட இடத்திற்கு போனார். என்று தீவிரமாக விசாரித்து கொண்டு இருக்கிறோம்” என்றார்.

 

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் “வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் இருக்கின்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமா? என்ற மிகப்பெரிய கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. காலையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த அனைவர் மீதும், அதற்கு அனுமதி கொடுத்த அதிகாரிகள், நுழையவிட்டு பாதுகாப்பு கொடுத்தவர்கள் அனைவர் மீதும் கிரிமினல் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் கழக நிர்வாகிகளும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் இரவு பகல் பார்க்காமல் விழிப்புணர்வுடன் இருந்து, வாக்கு எண்ணிக்கை மையங்களைக் கைப்பற்ற நினைக்கும் அராஜக அதிமுக ஆட்சியிடமிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். எல்லோரும் பயந்த மாதிரியே நடக்குது. ஓட்டு மிஷினில் கைவைத்துவிடுவார்களோ என்று எதிர்க்கட்சியினரும் மக்களும் பேசுவது கேட்க தொடங்கியிருக்கிறது.
 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...