Skip to main content

'சாமியார் சண்டை...'-ஃபாரீனில் பட்டுக்கோட்டை சித்தருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

Published on 23/09/2022 | Edited on 23/09/2022

 

'Samiyar fight...'- Pity of Pattukottai Siddhar in foreign

 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் பிரபல சாமியார் ராஜ்குமார். கையில் குச்சியை வைத்துக்கொண்டு அவரை தேடி வருபவர்களை அந்த குச்சியால் குத்தி பார்த்து அருள்வாக்கு சொல்வதும் இவரது வழக்கம். இதனால் அந்த பகுதியில் முக்கிய சாமியாராக அறியப்பட்ட ராஜ்குமார் ருத்ர சித்தர் என்று அழைக்கப்படுகிறார். இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி இவரை தேடி சிங்கப்பூரிலிருந்து ஒரு பக்தர் வந்துள்ளார். தனது சகோதரருக்கு உடல்நிலை சரியில்லை நீங்கள் அங்கு வந்து தனது சகோதரரை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்த கையோடு அவருடைய செலவிலேயே சிங்கப்பூருக்கு ருத்ர சித்தரை அழைத்துச் சென்றுள்ளார்.

 

ஆனால் ருத்ர சித்தர் சென்ற இடத்தில் இப்படி நிகழும் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார், காரணம் அங்கு கூட்டி செல்லப்பட்ட இடத்தில் இவரை போன்றே வேறொரு சாமியார் இருந்தார். அப்பொழுது இரு சாமியார்களுக்குள்ளும் யார் உண்மையான சாமியார் என்ற போட்டி ஏற்பட்டது. திடீரென பட்டுக்கோட்டை சாமியாரின் கழுத்தை காவி துண்டோடு பிடித்த சிங்கப்பூர் சாமியார் ''திருட்டு வேலை செஞ்சுக்கிட்டுருக்கியா டா'' என  தகாத ஆபாச வார்த்தைகளால் திட்டி சண்டையை துவங்கினார். 'நீ அகோரிதான' என கேள்வி எழுப்பிய சிங்கப்பூர் சாமியார்  ''என் கண்ணை பார்.. கண்ணை பார் டா''  என அடுக்குமொழியில் பேச, பட்டுக்கோட்டை சித்தர் பயத்தில் உறைந்தார்.

 

'Samiyar fight...'- Pity of Pattukottai Siddhar in foreign

 

அந்த அறையின் கதவு பூட்டப்பட்டதால் என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்தார் ருத்ர சித்தர். ''இதுக்குதான் கூப்பிட்டாயா நீ'' என பரிதாபமாக அழைத்து சென்ற நபரை பார்த்து கேட்டார் ருத்ர சாமியார். எப்படியோ இறுதியில் கதவை திறக்கும் சூழல் ஏற்பட, அங்கிருந்து ஓட்டம் பிடிக்க முயன்றார் பட்டுக்கோட்டை சித்தர். ஆனால் அந்த நேரத்திலும் விடாத சிங்கப்பூர் சாமியார் வேட்டியை எட்டிப்பிடிக்க, நிராயுதபாணியாக வீதிக்கு ஓடினார் பட்டுக்கோட்டை சித்தர். பின்னர் வெளியே வந்துவிட்டோம் என்ற தைரியத்தில் சிங்கப்பூர் சாமியார் மீது சேர்த்து வைத்திருந்த ஆத்திரத்தை வசைச்சொற்களால் வெளியேற்றிய ருத்ர சித்தர், அப்படியே காரில் ஏறி சிங்கப்பூர் போலீசாரிடம் புகாரளித்து விட்டு தமிழகம் திருப்பினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

தமிழகத்தில் இவர் காரைவிட்டு இறங்கினால் பாதம் நோகக் கூடாது என்பதற்காக பூக்கள் போட்டு அதன் மேல் நடந்து வர வைப்பார்களாம் இவரது பக்தர்கள். பாவம் பட்டுக்கோட்டை சித்தர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அர்ச்சகர் உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்; எழுந்த சர்ச்சை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Controversy arose Police in priest's garb on security duty in U.P

மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், 80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு, அம்மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அர்ச்சகர் உடையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாக, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் வீடியோ வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள வாரணாசி பகுதியில் புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு, ஏராளமான மக்கள் தினசரி வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில், இந்த கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், அர்ச்சர்கள் உடைகளை அணிந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோவை, உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஆண் போலீசார் வேட்டி மற்றும் குர்தாவிலும், பெண் போலீசார் சல்வார் குர்தாவிலும் உள்ளனர். 

இதனைத் தொடர்ந்து, அந்தப் பதிவில் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளதாவது, “காவல்துறை கையேட்டின்' படி காவலர்கள் அர்ச்சகர் போல் வேஷம் அணிவது சரியா? இப்படி உத்தரவு பிறப்பிப்பவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். நாளை, இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அப்பாவி பொதுமக்களை யாராவது சூறையாடினால், உ.பி அரசும், நிர்வாகமும் என்ன பதில் சொல்லும்? இந்த முடிவு கண்டிக்கத்தக்கது” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story

புரோகிதர் வீட்டில் 50 பவுன் நகை திருட்டு; போலீசார் விசாரணை

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 50 pound jewelery stolen from priest's house; Police investigation

புரோகிதர் வீட்டில் 50 பவுன் நகை மர்ம நபர்களால் திருடப்பட்ட கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள சிட்லபாக்கத்தில் வசித்து வருபவர் ரங்கராஜ். புரோகிதம் செய்யும் தொழில் வந்த செய்து வந்த ரங்கராஜ் கடந்த வெள்ளிக்கிழமை அவருடைய தந்தையின் நூறாவது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அவருடைய குடும்பத்துடன் மயிலாப்பூர் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்பொழுது திடீரென ரங்கராஜன் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிப்பவர்கள் அவருக்கு போன் செய்து உங்களுடைய வீட்டின் கதவு திறந்து கிடக்கிறது என பகீர் தகவலை தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரங்கராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறி அடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தனர். வந்து பார்க்கையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. 50 பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக காவல் நிலையத்திற்கு ரங்கராஜ் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரங்கராஜன் வீட்டிற்கு வெளியே சிசிடிவி கேமராக்கள் அந்த பகுதியில் பொருத்தப்படாததால், குற்றவாளியை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.