'The same trial period that took place after the demise of MGR is now taking place' - Sasikala talk!

Advertisment

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் திருமண விழாவில் கலந்து கொண்ட சசிகலா 'அதிமுக நல்ல நிலையை அடைவதற்கு தான் காரணமாக இருக்க போகிறேன். அது வரை ஓயமாட்டேன்' எனப் பேசியுள்ளார்.

அந்த விழாவில் பேசிய சசிகலா, 'அதிமுக எத்தனையோ உண்மையான தொண்டர்களின் தியாகத்தால் உருவானது. எதிர்க்கட்சியினர் எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் இருக்கின்ற வரை இந்த இயக்கத்தை யாராலும் அசைத்து விட முடியாது. இதை அனைவரும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த இயக்கம் எத்தனையோ சோதனையான காலகட்டங்களை எல்லாம் கடந்து வந்துள்ளது. எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அதே சோதனையான காலம்தான் தற்போது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் மீண்டும் ஏற்பட்டுள்ளது. அன்றைக்கு எவ்வாறு அதிமுக மீண்டெழுந்து வந்ததோ அதேபோன்று தற்பொழுதும் புதுப்பொலிவு பெற்று, உன்னத நிலையை அடையும் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை. கடைக்கோடி தொண்டன் நிமிர்ந்தால் தான் கழகம் நிமிரும் என்பதை எந்நாளும் மறக்காதீர்கள். தன்னலமற்ற தொண்டர்கள் நம்மோடு இருக்கும் இந்த சூழலில் நம் கழகம் மீண்டும் அதே மிடுக்கோடு, செருக்கோடு தலைநிமிரும் என்பதை எல்லோரும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்'' என்றார்.