ஈரோடு மாவட்டம் பவானிசாகர் (தனி தொகுதி) அதிமுக எம்.எல்.ஏவான ஈஸ்வரன் திருமணத்திற்காக முன்பு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண்சந்தியா எம்.எல்.ஏவை பிடிக்கவில்லை என்றும் அவருக்கு தன் அப்பா வயது ஆகிறது என்றும் இந்த திருமணம் வேண்டாம் என்றுதனது வீட்டை விட்டு வெளியே சென்றார். பிறகு கோபிசெட்டிபாளையம் போலீசார் சந்தியாவை மணப்பாறையில் கண்டுபிடித்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது சந்தியா எம்.எல்.ஏவை திருமணம் செய்துகொள்ள எனக்கு விருப்பம் இல்லை என நீதிபதியிடம் கூறினார். பிறகு சந்தியாவை அவரின் பெற்றோரிடமே செல்ல நீதிபதி உத்தரவிட்டார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
இப்படிஎம்.எல்.ஏ நிச்சயம் செய்த மணப்பெண் சந்தியா விவரகாரம் முடிவுக்கு வரஇதைத்தொடர்ந்து முன்பே முடிவுசெய்யப்பட்ட12/9/2018 அன்றுதிருமணத்தை நடத்துவது என தீவிரமாக களமிறங்கிய மணமகன்எம்.எல்.ஏ ஈஸ்வரன் மணப்பெண் தேடி ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், திருப்பூர், கோவை என பல்வேறு மாவட்டங்களில் அவரது உறவினர்கள், நண்பர்கள் என பலரையும் களமிறக்கினார். கடந்த மூன்று நான்கு நாட்களாக 20-க்கும் மேற்பட்ட மணப்பெண் விவரங்கள் கிடைத்திருக்கிறது. ஆனால் அந்த வரன்களை திருமணம் செய்ய எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கு விருப்பம் இல்லை என கூறப்பட்ட நிலையில்அதற்கு காரணம் பல வரன்கள் பெண்ணக்கு 20 வயது என்றும் சில வரன்கள் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற வரன்கள் என்றும் தெரியவருகிறது.
இதனால் விரக்தியடைந்த ஈஸ்வரன் எங்காவது 30 வயதுகொண்ட பெண்ணை சீக்கிரமாக பாருங்கள் என தனது உறவினர்களை வேகப்படுத்திவருகிறார். ஏன் இப்படி ஆவசரப்படுத்துகிறீர்கள் அதுதான் நாளாகி போச்சே கொஞ்சம் பொறுமையாகவே திருமணம் செய்யலாமே என அவரது சொந்தகாரர்கள் கூற முடியவே முடியாது நான் திட்டமிட்ட படி 12-ஆம் தேதிஏதோவொரு பெண்ணை திருமணம் செய்வேன். என் திருமணம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்தான் நடக்கும் எனகூறியிருக்கிறார் ஈஸ்வரன்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
திருமணத்திற்கு ஒரு வாரம்கூட இல்லாத நிலையில் மணமகன் ஈஸ்வரன் தாலிகட்ட தயாராக இருக்கிறார் ஆனால் அந்த தாலியை கட்டிக்கொள்ளும் ,மணமகள்தான் யார் என்று தெரியவில்லை. இந்தநிலையில் முதல்வர் எடப்பாடி அலுவலகத்திலிருந்து எம்.எல்.ஏ ஈஸ்வரனிடம் 12-ஆம் தேதி பண்ணாரியம்மன் கோவிலில் திருமணம் உண்டா? என கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஈஸ்வரன் கட்டாயமாகஉண்டு என பதில் கூறியிருக்கிறார். திரும்பவும் முதல்வர் அலுவலகம் மணப்பெண் யார் என கேட்கஅதற்கு ஈஸ்வரன் திருமணத்திற்கு முன்11-ஆம் தேதி யார்மணப்பெண் என்பதை தெரியப்படுத்துவேன் என கூறியிருக்கிறார். 43 வயதான எம்.எல்.ஏ மணமகன் ஈஸ்வரன் தனக்கான துணையை தேடி அதி தீவிரமாக அள்ளும் பகலும் ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்.