Advertisment

இன்று மாலை முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது சமயபுரம் கோவில் தங்கரதம்!

Samayapuram temple gold chariot to be used from evening

Advertisment

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில், பழுதடைந்திருந்த தங்கரதம் புனரமைக்கப்பட்டுப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, இன்று (15.12.2021) மாலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் அம்பாள் தங்கரதத்தில் எழுந்தருளி - தங்கரத உலா நிகழ்ச்சி - திருக்கோயில் வெளிப்பிரகாரத்தில் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தொடங்கி நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மாவட்ட ஆட்சித் தலைவர், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் பங்கு பெறுகிறார்கள். எனவே, திருக்கோயில் நிர்வாகம் சார்பில் நடைபெறும் மேற்காணும் தங்கரத புறப்பாட்டு தொடக்க நிகழ்ச்சியில் பக்தர்கள், கிராம ஆன்மிகப் பெரியவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொள்ள கோவில் நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திருக்கோயிலில் 16.12.2021 முதல் ஒவ்வொரு நாளும் தினசரி இரவு 07.15 மணிக்குப் பக்தர்கள் பிரார்த்தனையின்படி, தங்கரத புறப்பாடு தொடர்ந்து நடைபெறும். (திருவிழாக் காலங்கள் நீங்கலாக) பக்தர்கள் தங்கரதப் புறப்பாடு கட்டணத்தை திருக்கோயிலில் செலுத்தி தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளுமாறும் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

temple samayapuram trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe