Advertisment

சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கம் அரங்கநாதனிடம் சீர் பெறும் விழா; கோலாகலக் கொண்டாட்டம்

சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கம் அரங்கநாத ஸ்வாமியிடம் சீர் பெறும் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

Advertisment

தைப்பூச பெருந்திருவிழாவில் தீர்த்தவாரி மற்றும் சீர் பெறும் விழாவிற்காக கொள்ளிடம் ஆற்றில் சமயபுரம் மாரியம்மன் எழுந்தருளினார். பல நூறு ஆண்டுகளாக இந்த சீர் கொடுக்கும் பெருவிழா நடைபெற்று வருகிறது.மாரியம்மனுக்கு என்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு திருத்தலங்கள் இருந்தாலும் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் மிகவும் பிரசித்தி பெற்றவராகவும் எல்லா மாரியம்மன் திருத்தலங்களிலும் முதன்மையானவராகவும்பார்க்கப்படுகிறார்.

Advertisment

அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் தைபூசதினத்தன்று கொள்ளிடம் ஆற்றங்கரையில் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி ஸ்ரீரங்கம் அரங்கநாத ஸ்வாமியிடம் இருந்து சீர்வரிசை பெறும் நிகழ்ச்சி மிகவும் சிறப்புக்குரிய நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சமயபுரம் மாரியம்மன் கூத்தூர் டோல்கேட் வழியாக வழி நெடுகிலும் தேங்காய், மாப்பூசை வாங்கியபடி கொள்ளிடம் ஆற்றிற்கு வந்தடைந்தார். பின்னர் ஸ்ரீரங்கத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சீர்வரிசை பொருட்கள் தீர்த்த வாரி சமயபுரம் மாரியம்மனுக்கு வழங்கப்பட்டது.

mariyamman kovil samayapuram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe