Published on 03/02/2021 | Edited on 03/02/2021

தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி என களத்தில் இறங்கியிருக்கின்றன.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிக்குப் பின், சமத்துவக் கட்சி சார்பில் அதன் தலைவர் சரத்குமார் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், ''நான்தான் சொல்லிவிட்டேனே ஒரு சீட்டு, ரெண்டு சீட்டு, மூணு சீட்டுக்கெல்லாம் நிக்க மாட்டோம். அப்படி நாங்கள் கேட்டும் தரவில்லை என்றால் என்ன, மூன்றாவது அணி உருவாக்கலாம். ஒரு அணி என்னை தலைமையேற்று வந்தால், அந்த அணி சிறப்பாக வர, மக்களுக்காக சேவை செய்ய தயாராக இருக்கிறோம். எனவே அதற்கான வாய்ப்பும் உருவாகலாம்'' என்றார்.