Advertisment

சமபந்தி விருந்து;எடப்பாடி,தமிழிசை பங்கேற்பு!

இந்துசமய அறநிலைத்துறை சார்பாக இந்திய சுதந்திர நாளை முன்னிட்டு சமபந்தி மற்றும் பொது விருந்துக்கு இந்து சமய அறநிலைத்துறை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விருந்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். கேகே நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் இந்த சமபந்தி விருந்து நடைபெற்றது. இவர்களுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.

Advertisment

தமிழகம் முழுவதும் 448 கோவில்களில் இந்த சமபந்தி விருந்திற்குஇந்து அறநிலையத்துறை ஏற்பாடு செய்திருக்கிறது. பல்வேறு திருக்கோவில்களில் அமைச்சர்கள் கலந்து கொண்ட நிலையில், கேகே நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில்நடைபெற்றும் சமபந்தி விருந்தில் முதல்வர் எடப்பாடி கலந்து கொண்டார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த சிறப்பு திட்டத்தின் படி நிதி வசதி மிக்க திருக்கோவில்களில் தமிழகம் முழுவதும் தொடர்ந்து சமபந்தி விருந்து என்பது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisment

இன்றைய தினத்தை பொறுத்தவரை 448 கோவில்களில் அனைத்து சமுதாய மக்களும் பங்கு பெறும் வகையில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இலையில் தற்போது நடந்த அந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ரக்ஷாபந்தனைமுன்னிட்டு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ராக்கி கட்டினார்.

independence day. edappadi pazhaniswamy Tamilisai Soundararajan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe