Skip to main content

“காவல்துறையினரின் தியாகங்களுக்கு வீரவணக்கம்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 21/10/2023 | Edited on 21/10/2023

 

Salute to the sacrifices of policemen says Chief Minister M.K.Stalin

 

காவல்துறையினரின் தியாகங்களுக்கு வீரவணக்கங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

ஆண்டு தோறும் அக்டோபர் 21 ஆம் தேதி பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக காவலர் வீரவணக்க நாள் அணுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று (21.10.2023) சென்னையில் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவு தூணிற்கு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தூர் மற்றும் காவ்ல்துறை அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதே போன்று தமிழ்நாடு முழுவதும் உயிரிழந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

 

இந்நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, பொதுமக்களின் நிம்மதியான வாழ்க்கை, நாட்டின் வளர்ச்சிக்காகத் தம் உயிரையும் பணையம் வைத்து நம்மைப் பாதுகாக்கும் கடமையுணர்வுமிக்க காவல்துறையினரின் தியாகங்களுக்கு காவலர் வீரவணக்க நாளில் எனது வீரவணக்கங்கள்” என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்