ஆவின் நிறுவனம் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்.
"தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் உள்ள 28 ஆவின் பால் தயாரிக்கும் நிலையங்களிலும் குடிநீர் பாட்டில் தயாரிக்கப்படும். அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலை விற்க ஏற்பாடு உள்ளது. அதேபோல், ஆவின் பால் பாக்கெட்டுகளில் சினிமா படங்களின் விளம்பரங்களை வெளியிடுவது பற்றியும் பரிசீலனை செய்து வருகிறோம்" என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.