Advertisment

சேலம் திருமணிமுத்தாறு இன்னும் 2 ஆண்டுகளில் மீட்கப்படும்; அமைச்சர் மெய்யநாதன் தகவல்!

Salem's thirumanimuthaaru will be restored in 2 years; Minister Meiyanathan information!

Advertisment

கழிவுநீர் கலப்பால் மாசடைந்துள்ள சேலம்திருமணிமுத்தாறுஇன்னும் இரண்டு ஆண்டுகளில் முழுமையாக மீட்டெடுக்கப்படும் என்று அமைச்சர்மெய்யநாதன்தெரிவித்துள்ளார்.

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர்மெய்யநாதன், சனிக்கிழமை (ஜூலை 2), சேலம்உத்தமசோழபுரம்அருகே,திருமணிமுத்தாற்றைநேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், செய்தியாளர்களிடம் கூறியது:

''சேலம்திருமணிமுத்தாறுநிலையைப் பார்க்கும்போது மிகுந்த வேதனையைத் தருகிறது. சேலம் மாநகராட்சியின் கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலப்பதாலும், சாயத்தொழிற்சாலைகளில் இருந்துவெளியேறும் கழிவுநீர் கலப்பதாலும் ஒட்டுமொத்தமாகதிருமணிமுத்தாறுமுற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

Advertisment

இந்த ஆற்றில் எந்த உயிரினமும் வாழ முடியாது. கழிவுநீர் கலந்ததால்ஆக்சிஜன்அளவு குறைவாக இருக்கும். இதனால்,நீர்வாழ்உயிரினங்களுக்கு முதல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நதி கடந்து போகும் பாதையோரம் உள்ள மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. நிலமும் பாதிக்கப்படுகிறது. இதுபற்றி எல்லாம் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேலம் மாநகராட்சியில் சுத்திகரிப்பு நிலையமானது 98எம்எல்டிதிறன் கொண்டது. ஆனால் தற்போது 30 சதவீதம் வரைதான் சுத்திகரிப்பு செய்யப்பட்டு ஆற்றில்கலப்பதாகசொல்கின்றனர். புதிதாக மூன்று சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சேலத்தில்பாதாளசாக்கடைத் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க 530 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றது. சாயக்கழிவு நீர்கலப்பதில் இருந்துதடுத்து,திருமணிமுத்தாறுமுழுமையாக மீட்டெடுக்கப்படும். இதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும். அதற்கான பணிகளை இன்று முதல் தொடங்கி விட்டோம்.

கழிவுநீரைமுழுமையாகசுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. அங்கு, புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ள இடத்தில் மின்சார வசதி இல்லாவிட்டால்சோலார்பிளாண்ட்அமைக்கப்படும்.

சேலத்தில்,சாயக்கழிவுகளைசுத்திகரிப்பு செய்யாமல்திருமணிமுத்தாற்றில்வெளியேற்றியதாக இதுவரை 45 சாய ஆலைகள் மூடப்பட்டுள்ளன. விதிகளை மீறிய சாய ஆலைகள், சலவைத் தொழிற்சாலைகளிடம் இருந்து 1.50 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது என்பது, தாய்ப்பாலில்விஷத்தைகலப்பதற்குசமம். நதியில் கழிவுகள்கலப்பதைதடுக்க வேண்டும். இதுதொடர்பாககூடுதல் அதிகாரிகளைநியமித்துகண்காணித்து, அறிக்கை வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

குப்பைகளை எரிக்கக் கூடாது.பிளாஸ்டிக்குப்பைகளை எரிப்பதன் மூலம் நச்சு வாயுக்கள் வெளியேறி, புற்றுநோயை உண்டாக்கும் ஆபத்து உள்ளது. தமிழகத்தில் 143 குப்பைக் கிடங்குகளில் குப்பைகள் தேக்கம் அடைந்திருப்பது தெரிய வந்தது. இவற்றில் 59 கிடங்குகளில்முழுமையாககுப்பைகள் தரம்பிரித்துக்கொட்டப்பட்டு வருகின்றன. இதன்மூலம் 200 கோடி ரூபாய் சொத்துகள் உயிர் நிலங்களாக மீட்கப்பட்டுள்ளன. குப்பைகளை எந்தக் காரணம் கொண்டும் எரிக்கக் கூடாது. தரம்பிரித்துக்கொட்ட வேண்டும். ராணிப்பேட்டையில், மாவட்ட ஆட்சியர் ஒரே நாளில் 187டன்பிளாஸ்டிக்குப்பைகளைசேகரித்துகின்னஸ்சாதனை படைத்துள்ளார்.

தமிழக முதல்வர் அறிவித்துள்ள, எனது குப்பை; எனது பெருமை திட்டம் வரவேற்பு பெற்றுள்ளது. வீடுகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ளகுப்பைகளைதரம்பிரித்துக்கொட்ட வேண்டும்'' இவ்வாறு அமைச்சர்மெய்யநாதன்கூறினார்.

ஆய்வின்போது,எம்.பி., பார்த்திபன்,எம்எல்ஏராஜேந்திரன், சேலம் மாநகராட்சிமேயர்ராமச்சந்திரன், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.

meyanathan minister Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe